கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுப்பள்ளி பூளக்காடு சுலைமான் என்பவரது மனைவி ஷகீதா(32). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. மேலும் ஷகீதா மூன்று மாத கர்பிணியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்த தனது மூன்றாவது குழந்தையான ஆறு வயதான அமில் இஹ்ஸானை கழிவறைகொண்டு சென்று கால்களை கட்டி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பின்னர் காவல் நிலையத்துக்கு போன் செய்து குழந்தையை கொலை செய்ததாக தகவல் கூறினார். போலீஸார் அங்கு சென்றபோது கதவை திறந்து கொலைச் செய்யப்பட்ட குழந்தையை காட்டினார். அதே சமயம் ஷகீதாவின் கணவரும் இரண்டு குழந்தைகளும் தூங்கிக்கொண்டிருந்தனர். பாலக்காடு சவுத் போலீஸார் சென்றுதான் ஷகீதாவின் கணவர் சுலைமானை எழுப்பி குழந்தை கொலைச் செய்யப்பட்ட விபரத்தை தெரிவித்தனர். அப்போதுதான் சுலைமானுக்கும் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ஷகீதா கைது செய்யப்பட்டார்.கொலைச் செய்யப்பட்ட 6 வயது சிறுவன் அமில் இஹ்ஸான்
`கடவுள் கேட்டதால் குழந்தையை பலி கொடுத்ததாக ஷகீதா வாக்குமூலம் கொடுத்து போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கொலைச் செய்யப்பட்ட அமில் இஹ்ஸான் கள்ளிக்காடு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த வழக்கு குறித்து போலீஸார் கூறுகையில், ``கடவுள் தன்னிடம் கேட்டுக்கொண்டதால் குழந்தையை பலி கொடுத்ததாக ஷகீதா கூறியிருக்கிறார். அதே சமயம் வீட்டில் சமையல் செய்ய கத்தி இல்லை, எனவே கத்தி வாங்கி வரும்படி கொலை செய்வதற்கு முந்தினம் கணவரிடம் கூறியிருக்கிறார்.
Also Read: 80 வயது மனைவியைக் குத்திக் கொலை செய்து எரித்த 84 வயது கணவர்! - மும்பை பயங்கரம்
கணவர் வாங்கிச் சென்ற புதிய கத்தியை வைத்து மகனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். முன்னதாக துணியால் சிறுவனின் கால்களை சேர்த்து கட்டியிருக்கிறார் ஷகீதா. அதுமட்டுமல்லாது இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் பாலக்காடு போலீஸின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்திருக்கிறார். ஜன மைத்ரி போலீஸ் (மக்கள் இணக்க காவல்துறை) அவசர எண் 112 என்ற எண்ணிற்கு குழந்தையை கொலை செய்த விபரத்தை கூறியதை அடுத்தே அங்கு சென்று விசாரணை நடத்தினோம்.மகனை கொலை செய்த ஷகீதா
கொரோனா லாக்டெளன் சமயத்தில் ஷகீதாவின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார். இப்போது பார்சல் வாகனம் ஓட்டும் பணி செய்து வருகிறார். ஷகீதா லாக்டெளனுக்கு முன்பு வரை பூளக்காடு மதரசா-வில் ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். மேலும் ஷகீதாவின் வாட்ஸ் அப் குரூப்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அதில் தீவிர மத நம்பிக்கை உடையவர்கள், மனநிலையை மாற்றி தூண்டிவிட்டதால் ஷகீதா இதுபோன்ற செயலில் ஈடுபட்டாரா என்பது போன்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
http://dlvr.it/RsJy90
Tuesday, 9 February 2021
Home »
» கேரளா: `கடவுள் கேட்டதால், பலிகொடுத்தேன்!’ - மகனை கொன்று காவலர்களையும் அழைத்த பெண்