பெண்களை ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாத்தித்து வந்த மாடலும், டிவி நடிகையுமான கெஹானா வசிஸ்த் (Gehana Vasisth) மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யபட்டார்.
மும்பையைச் சேர்ந்த பிரபல நடிகையும், மாடலுமான வந்தனா திவாரி (கெஹானா வசிஸ்த் – மேடைப் பெயர்) சின்னத்திரை தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஒரு சில விளம்பரப்படங்களில் நடித்ததன் மூலம் கடந்த 2012-ம் ஆண்டு `மிஸ் ஆசியா பிகினி’ போட்டியில் பங்கேற்று பட்டம்பெற்றார். அதன் பின்னர், ஒரு சில பாலிவுட் படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்தவர், புதிதாக ஒரு படம் எடுப்பதாகக் கூறி அதற்கு புதுமுகங்கள் தேவையென்று விளம்பரம் கொடுத்துள்ளார்.
அதைக் கண்ட பெண்கள் சிலர் இவரிடம் வாய்ப்புக் கேட்டு வந்துள்ளனர். அப்படி வந்த பெண்கள் பலரை ஆபாசமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்நிலையில், இது குறித்து தகவலறிந்த மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.கைது
இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய, மும்பை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், ``கெஹானாவும் அவரது கூட்டாளிகளும் சேர்ந்து பெண்களை நடிக்க வைப்பதாகக் கூறி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதன் மூலம் பல லட்சம் ரூபாய் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இதுவரை 87 வீடியோக்களை எடுத்து பதிவேற்றியுள்ளனர். மேலும் இதனை இணையத்தில் பார்க்க பார்வையாளர்களிடம் 2,000 ரூபாய் சந்தாவாக வசூலித்துள்ளனர்.
Also Read: வீட்டிற்கே சென்று உதவிகள்... பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்களை மீட்கும் காவல்துறையின் `தோழி’
மும்பையின் சொகுசு பங்களா ஒன்றில் தங்கி இதனை செய்து வந்த கெஹானா வசிஸ்த், பல பெண்களை தன் வசம் வைத்துகொண்டு இக்குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர் தங்கியிருந்த பங்களாவில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவர்களிடமிருந்த கேமரா, மெமரி கார்டுகள், லேப்டாப், 36 லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கெஹானா வசிஸ்த்
அவர்களிடம் சிக்கியிருந்த பெண்கள் மீட்கப்பட்டு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுள்ளனர். கொரோனா காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் குற்றச்செயலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
http://dlvr.it/RsBsNd
Sunday, 7 February 2021
Home »
» ஆபாச வீடியோ சர்ச்சை; மும்பையில் டிவி நடிகை கைது! - என்ன நடந்தது?
ஆபாச வீடியோ சர்ச்சை; மும்பையில் டிவி நடிகை கைது! - என்ன நடந்தது?
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!