மகாராஷ்டிராவில் ஆளுநராக இருக்கும் பகத் சிங் கோஷியாரி மாநில அரசின் பல திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்துவருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, சட்டமேலவை நியமன உறுப்பினர்கள் 12 பேர் பட்டியலை மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், ஆளுநர் அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து இழுத்தடித்துவருகிறார். உத்தவ் தாக்கரே
எப்படியாவது சிவசேனா கூட்டணி அரசு கவிழ்ந்துவிடும் என்றும், அதன் பிறகு பா.ஜ.க ஆட்சி அமைத்தால் அவர்கள் நியமிக்கும் உறுப்பினர்களை, சட்டமேலவை நியமன உறுப்பினர்களாக்கலாம் என்றும் ஆளுநர் நினைத்துக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஆளுநர் இதில் முடிவுவெடுக்காமல் இருந்துவருகிறார். இந்த விவகாரத்தில் மாநில அரசு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டிருக்கிறது.
அதோடு மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மும்பைக்கு வந்திருந்த விவசாயிகளைச் சந்திக்காமல் ஆளுநர் கோவாவுக்குச் சென்றுவிட்டார். இதனால், `ஆளுநருக்கு நடிகைகளைச் சந்திக்க நேரம் இருக்கிறது. ஆனால், விவசாயிகளைச் சந்திக்க நேரம் இல்லை’ என்று சரத்பவார் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இது போன்று பல பிரச்னைகளில் ஆளுநர், மாநில அரசுடன் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார். இந்தநிலையில் உத்தரகாண்ட் பெருவெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் காணாமல்போய்விட்டனர். உத்தரகாண்ட், ஆளுநர் பகத்சிங் கோஷியாரியின் சொந்த மாநிலம். எனவே அதைப் பார்வையிடுவதற்காக உத்தரகாண்ட் செல்ல பகத்சிங் முடிவு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு புறப்பட்டு விமான நிலையம் சென்றார். அங்கு அரசு விமானத்தின் பைலட்டிடம் விமானத்தைக் கிளப்பும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், விமானத்தைக் கிளப்ப தனக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று பைலட் தெரிவித்துவிட்டார்.
Also Read: தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் உத்தவ் தாக்கரே! - கடிவாளம் போடும் காங்கிரஸ்...
உடனே அங்கிருந்தே முதல்வர் உத்தவ் தாக்கரேவைத் தொடர்புகொள்ள ஆளுநர் முயன்றார். ஆனால், உத்தவ் தாக்கரே போனை எடுக்கவே இல்லை என்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி வேறு தனியார் விமானத்தில் செல்லலாம் என்று முடிவு செய்து திரும்ப வந்துவிட்டார். பின்னர், வேறு விமானத்தில் புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தால் அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் மேலும் வெடித்திருக்கிறது.
http://dlvr.it/RsV12w
Thursday, 11 February 2021
Home »
» அரசு விமானத்தில் ஏற ஆளுநருக்கு அனுமதி மறுப்பு!- தகிக்கும் மகாராஷ்டிர அரசியல்