கேரள மாநிலத்தில் சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி இப்போது ஆட்சி செய்துவருகிறது. முதல்வராக பினராயி விஜயன் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகிறார். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6-ம் தேதிதான் கேரள மாநிலத்திலுள்ள 140 தொகுதிகளிலும் ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. 71 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நிலையில் 85 தொகுதிகளில் போட்டியிடுகிறது சி.பி.எம்.
அதன் கூட்டணிக் கட்சிகளான சி.பி.ஐ., கேரள காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு மற்ற தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், 83 தொகுதிகளில் சி.பி.எம் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை சி.பி.எம் மாநிலச் செயலாளர் விஜயராகவன் வெளியிட்டார். கடந்த முறை 92 தொகுதிகளில் போட்டியிட்ட சி.பி.எம் இந்த முறை ஏழு சீட்டுகள் குறைவாக 85 சீட்டுகளில் போட்டியிடுகிறது. சட்டசபை சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு இம்முறை சீட் வழங்கப்படவில்லை. மேலும் மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், பள்ளிக்கல்விதுறை அமைச்சர் ரவீந்திரநாத், அமைச்சர்கள் சுதாகரன், இ.பி.ஜயராஜன், ஏ.கே.பாலன் உள்ளிட்ட ஐந்து சிட்டிங் அமைச்சர்களுக்கு போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.பினராயி விஜயன்
அமைச்சர்கள் உட்பட மொத்தம் 33 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்படவில்லை. கடந்தமுறை 12 பெண் வேட்பாளர்களுக்கு சீட் வழங்கிய சி.பி.எம் இந்தமுறையும் 12 பெண்களுக்கு போட்டியிட சீட் வழங்கியிருக்கிறது. வேட்பாளர் பட்டியலில் பட்டப்படிப்பு படித்த 42 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில் 22 பேர் வழக்கறிஞர்கள். 30 வயதுக்கு கீழுள்ள நான்கு பேரும், 30-க்கும் 40-க்கும் இடைப்பட்ட வயது கொண்ட எட்டுப் பேரும், 41 முதல் 50 வயதுக்குள் உள்ள 13 பேரும், 51 முதல் 60 வயதுக்குள் 33 பேரும், 60 வயதுக்கு மேல் உள்ள வேட்பாளர்கள் 24 பேரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மொத்த சி.பி.எம் போட்டியிடும் 85 சீட்டுகளில் 74 பேர் மட்டுமே கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். மீதமுள்ள 9 பேர் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்கள். கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் பினராயி விஜயன் போட்டியிடுகிறார். அதே கண்ணூர் மாவட்டம் மட்டனூர் தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள களக்கூட்டம் தொகுதியில் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனும் போட்டியிடுகிறார்.ஓட்டுக் கேட்ட கடகம்பள்ளி சுரேந்திரன்
வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டவுடனே அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தனது தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். எல்.டி.எஃப் கூட்டணியில் சி.பி.எம் 83 வேட்பாளர்களையும், சி.பி.ஐ 21 வேட்பாளர்களையும், கேரள காங்கிரஸ் (எம்) 12 வேட்பாளர்கள், மற்றுமுள்ள கட்சிகளும் சேர்த்து இதுவரை 132 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். மீதமுள்ள எட்டு தொகுதிகளில் விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவிருக்கிறார்கள்.
http://dlvr.it/RvQgY7
Thursday, 11 March 2021
Home »
» கேரளா: சி.பி.எம் வேட்பாளர் பட்டியல்... 5 அமைச்சர்கள், 33 சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் இல்லை!