நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி ஊசி போட்டுக்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் அரசின் WWW.COWIN.ORG என்ற தளத்திலோ அல்லது ஆரோக்ய சேது போன்ற அரசு செயலிகளிலோ முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது தடுப்பூசி போடும் மருத்துவமனைகளிலும் நேரில் முன் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
http://dlvr.it/RtnC7x
Tuesday, 2 March 2021
Home »
» 60 வயதை கடந்த 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி