மும்பையில் கடந்த மாதம் 25ம் தேதி தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டிற்கு அருகில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் தானே பகுதியை சேர்ந்த மன்சுக் கிரண் என்பவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அடுத்த ஓரிரு நாளில் கிரண் மும்பை அருகே கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார். இந்த சம்பவங்களில் குற்றப்பிரிவு அதிகாரியும் என்கவுன்டர் ஸ்பெலிஸ்ட்டுமான சச்சின் வாஸ் என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.சச்சின் வாஸ்
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணயை மத்திய அரசு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம்(என்.ஐ.ஏ) கொடுத்தது. மாநில தீவிரவாத தடுப்பு படையும் விசாரித்து வந்தது. சச்சின் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே சச்சின் குற்றப்பிரிவில் இருந்து வேறு துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். கிரணின் காரில் வெடிகுண்டை வைத்ததில் சச்சினுக்கு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில் நேற்று என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸ் அதிகாரி சச்சினுக்கு சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்று நேற்று சச்சின் விசாரணைக்கு ஆஜரானார். 12 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணைக்கு பிறகு இரவில் சச்சினை கைது செய்தனர். விசாரணைக்கு ஆஜராக செல்லும் முன்பு, ``தன்னுடன் பணிபுரியும் அதிகாரிகள் தன்னை சிக்க வைத்துவிட்டனர். 2004ம் ஆண்டும் தவறான குற்றச்சாட்டின் கீழ் என்னை கைது செய்தனர். அதில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 17 ஆண்டுகளாக காத்துக்கிடக்கிறேன்.. அது போன்று இப்போதும் நடக்க இருக்கிறது. இந்த உலகத்தை விட்டுச்செல்வதற்கான நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்” சச்சின் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேடசில் தெரிவித்தார். அம்பானி வீட்டின் நுழைவு வாயில்
சச்சின் இதற்கு முன்பு சிவசேனாவில் இருந்தார். எனவே இக்கொலை விவகாரத்தில் மாநில அரசு சரியாக விசாரிக்காது என்று கருதியே விசாரணையை மத்திய அரசு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடம் ஒபடைத்தது. இதனால் முகேஷ் அம்பானி வீட்டு பாதுகாப்பு குளறுபடி சம்பவத்தில் அரசியல் புகுந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
http://dlvr.it/RvfFL9
Monday, 15 March 2021
Home »
» அம்பானி வீடு; வெடி பொருட்களுடன் கார்! - என்கவுன்டர் ஸ்பெலிஸ்ட்டை நள்ளிரவில் கைது செய்த என்.ஐ.ஏ