தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி அமையும் என புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை என்ன என்ற தலைப்பில் புதிய தலைமுறை, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பல்வேறு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அதன் முடிவில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் என்பது தெரியவந்துள்ளது. இந்தக் கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் மக்களின் பதில்களில் வெளியான முடிவுகளும் பின்வருமாறு: தமிழகத்தில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்? திமுக கூட்டணி : 151 - 158அதிமுக கூட்டணி : 76-83 வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள்? அதிமுக கூட்டணி:28.48%திமுக கூட்டணி: 38.20%மநீம கூட்டணி: 6.30%சசிகலா ஆதரவு: 1.09%நாம் தமிழர் கட்சி: 4.84%மற்றவை: 9.53%தெரியாது: 11.56% உங்கள் தொகுதியில் பலமுனைப்போட்டி ஏற்பட்டால் யாருக்கு வாக்களிப்பீர்கள்? அதிமுக கூட்டணி:28.39%திமுக கூட்டணி: 38.51%மநீம கூட்டணி: 6.28%சசிகலா ஆதரவு: 1.11%நாம் தமிழர் கட்சி: 4.84%மற்றவை: 9.97%தெரியாது: 10.90% எந்த கட்சிக்கு வாக்களிப்பு : மண்டல வாரியாக அதிமுக கூட்டணி - தெற்கு தொகுதிகள் 24.58% ; மேற்கு தொகுதிகள் 36.54% ; மத்திய தொகுதிகள் 30.53% ; வடக்கு தொகுதிகள் 32.61% ; சென்னை 20.81%திமுக கூட்டணி - தெற்கு தொகுதிகள் 35.90% ; மேற்கு தொகுதிகள் 28.50% ; மத்திய தொகுதிகள் 34.33% ; வடக்கு தொகுதிகள் 42.93% ; சென்னை 47.27%மநீம கூட்டணி - தெற்கு தொகுதிகள் 6.40% ; மேற்கு தொகுதிகள் 9.26% ; மத்திய தொகுதிகள்4.61% ; வடக்கு தொகுதிகள் 2.50% ; சென்னை 8.42%சசிகலா ஆதரவு - தெற்கு தொகுதிகள் 1.67% ; மேற்கு தொகுதிகள் 0.59% ; மத்திய தொகுதிகள் 2.17% ; வடக்கு தொகுதிகள் 0.54% ; சென்னை 0.59%நாம் தமிழர் கட்சி - தெற்கு தொகுதிகள் 7.61% ; மேற்கு தொகுதிகள் 3.44% ; மத்திய தொகுதிகள் 5.29% ; வடக்கு தொகுதிகள் 2.93% ; சென்னை 4.46%மற்றவை - தெற்கு தொகுதிகள் 13.91% ; மேற்கு தொகுதிகள் 9.86% ; மத்திய தொகுதிகள் 10.85% ; வடக்கு தொகுதிகள் 6.41% ; சென்னை 6.44%தெரியாது - தெற்கு தொகுதிகள் 9.93% ; மேற்கு தொகுதிகள் 12.00% ; மத்திய தொகுதிகள் 12.21% ; வடக்கு தொகுதிகள் 12.07% ; சென்னை 11.99% தமிழ்நாட்டின் அடுத்த முதல்வராக யார் வரவேண்டும்? 37.51% பேர் ஸ்டாலினே முதல்வராக வரவேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி - 28.33%, கமல்ஹாசன் - 6.45%, சீமான் - 4.93%, சசிகலா - 1.33% பேர் என தெரிவித்துள்ளனர். அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா அறிவித்ததற்கு முன்பே இந்தக் கருத்துக் கணிப்பு மக்களிடம் நடத்தப்பட்டதால், அவரது பெயரும் இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகளில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது. சசிகலா மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதை ஆதரிக்கிறீர்களா? முழுமையாக ஆதரிக்கிறேன் - 2.25%ஆதரிக்கிறேன் - 7.20 %ஆதரிக்கவில்லை - 45.64%எதிர்க்கிறேன் - 27.45%வேறு கருத்து - 4.32%தெரியாது / சொல்ல இயலாது - 13.15% திமுக வெற்றி பெற எது உதவும் என கேள்வி எழுப்பப்பட்டது. அதன் முடிவுகள்: ஸ்டாலின் தலைமை - 37.96%மத சார்பின்மை - 8.35%இபிஎஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலை - 6.72%அதிமுக - பாஜக கூட்டணி - 9.16%அதிமுக அரசின் மீதான மத்திய அரசின் கட்டுப்பாடு - 6.48%வேறு கருத்து - 11.93%தெரியாது / சொல்ல இயலாது - 19.41% அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேயான கூட்டணி பற்றி நீங்கள் கருதுவது என்ன? சந்தர்ப்பவாத கூட்டணி - 36.87%தமிழகத்துக்கு நல்லது - 16.66%அதிமுக ஆதாயமடையும் - 8.44%அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் - 7.02%பாஜக ஆதாயமடையும் - 5.91%வேறு கருத்து - 7.61%தெரியாது/ சொல்ல இயலாது - 17.49% மத்தியில் ஆட்சியில் இருந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட தற்போதைய பாஜக அரசு தமிழகத்துக்கு கூடுதல் நன்மைகளை செய்திருப்பதாக நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு 22.87% பேர் ஆம் எனவும், 60.03% பேர் இல்லை எனவும், 7.09% பேர் வேறு கருத்துகளையும், 10.01% தெரியாது/ சொல்ல இயலாது எனவும் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த விவசாயிகள் போராட்டத்தை 81.20% பேர் ஆதரிப்பதாகவும், 8.24% பேர் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 3.95% வேறு கருக்களையும் தெரியாது/ சொல்ல இயலாது என 6.61% பேரும் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பத்துக்கு எத்தனை மதிப்பெண்கள் தருவீர்கள்? 13.06% பேர் 5 மதிப்பெண்களும், 10.01% பேர் 1 மதிப்பெண்ணும், 9.59% பேர் 8 மதிப்பெண்களும், 8.92% பேர் 7 மதிப்பெண்களும், 7.50 % பேர் 4 மதிப்பெண்களும், 7.39 பேர் 10 மதிப்பெண்களும், 6.74% பேர் 2 மதிப்பெண்களும், 6.13% பேர் 6 மதிப்பெண்களும் 4.91% பேர் 0 மதிப்பெண்களும், 4.84% பேர் 9 மதிப்பெண்களும் 13.85% பேர் சொல்ல இயலாது என தெரிவித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தால் பொருளாதார ரீதியில் எந்த அளவுக்கு மக்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்ற கேள்விக்கு 41.39% மிகக்கடுமையாக எனவும், 30.35% கடுமையாக எனவும், 8.85% மிதமாக எனவும் 8.46% குறைவாக எனவும், 9.75% பேர் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 0.31% பேர் வேறு கருத்தையும், 0.89% பேர் தெரியாது / சொல்ல இயலாது எனவும் தெரிவித்தனர். தற்போது உங்களது பொருளாதார நிலைமை சீராகிவிட்டதா? ஆம் - 16.22 %சீராகி வருகிறது - 45.53%இல்லை - 34.41%வேறு கருத்து - 1.50%தெரியாது /சொல்ல இயலாது - 2.33%
http://dlvr.it/RwBN2K
Tuesday, 23 March 2021
Home »
» தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி: புதிய தலைமுறை கருத்துக்கணிப்பு முடிவுகள்