ஏ.ஆர்.ரஹ்மான் எழுதி தயாரித்துள்ள '99 சாங்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சென்னையில் உலக சினிமாக்களை எடுக்க முடியும் என்று பேசினார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் எழுதி, தயாரித்துள்ள ‘99 சாங்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா, இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், ஷங்கர், கே.எஸ் ரவிக்குமார், இசையமைப்பாளர்கள் அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதை எழுதி, தயாரித்துள்ள '99 சாங்ஸ்' என்னும் திரைப்படம், இசை துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் ஒரு இசை கலைஞரின் பயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் புதுமுக நடிகராக இஹான் என்பவர் அறிமுகமாகிறார். மேடையில் இந்தப் படம் குறித்து பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “ இந்தப்படத்திற்கான இன்ஸ்ப்ரேஷன் வாழ்க்கைதான். இது என்னோட கதை இல்லை. கலைஞனின் வாழ்க்கையில் போராட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் எல்லா விதமான படங்களையும் தயாரிக்க முடியும். அதற்கான அத்தனைத் தகுதிகளையும் கொண்ட கலைஞர்கள் இங்கு உள்ளனர்.” என்றார். அடுத்த மாதம் 16 ஆம் தேதி படம் வெளியாகிறது.
http://dlvr.it/RwPlS0
Friday, 26 March 2021
Home »
» ”உலக சினிமாக்களை சென்னையிலேயே எடுக்க முடியும்” - ஏ.ஆர்.ரஹ்மான் பெருமிதம்