பாஜகவின் தேர்தல் விளம்பரத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் படத்தினை பயன்படுத்தியுள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் காட்டமான பதிலை அளித்துள்ளார் பாஜகவின் தேர்தல் விளம்பரத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான, ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரத்தின் பாரதநாட்டியத்தின் ஒரு பகுதியை பயன்படுத்தியுள்ளனர். Faux pas by Tamil Nadu BJP! ?They have used a portion of Bharatanatyam performed by Srinidhi Karti Chidambaram in their election promo. She had performed this 10 years back for the "Semmozhi" song penned by M Karunanidhi and composed by AR Rahman. #TamilNaduElections pic.twitter.com/dlEsNFR8rx — Shilpa Nair (@NairShilpa1308) March 30, 2021 இந்த புகைப்படக்காட்சிகள், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுதி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த "செம்மொழியான தமிழ்மொழியே" பாடலுக்காக 10 ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட வீடியோவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் தோன்றிய பரதநாட்டிய காட்சிகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியதும், கடும் விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன. இதற்கு பதிலளித்துள்ள ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் “ பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்காக எனது புகைப்படத்தை பயன்படுத்தியது அபத்தம். தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என தெரிவித்திருக்கிறார்
http://dlvr.it/RwhWkX
Wednesday, 31 March 2021
Home »
» பாஜக தேர்தல் விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகளின் படம்: தாமரை மலரவே மலராது என வைரல் பதில்