தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் “2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டஙக்ளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒறை கருத்தின் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிக மற்றும் தமாகாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பாமகவுக்கு நிகராக 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வந்த நிலையில், 13 அல்லது 14 தொகுதிகளை ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருந்தது. இதனால், அதிருப்தி அடைந்த தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் முடிவை எடுத்துள்ளது.
http://dlvr.it/RvH8R3