டெண்டர் வழக்கு விவகாரத்தில் முதல்வர் தடை வாங்காமல் இருந்திருந்தால் இன்று அவர் சிறைக்குள் இருந்திருப்பார் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை, திருப்போரூர் விசிக வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா, செங்கல்பட்டு வேட்பாளர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், ”பல்வேறு பொறுப்புகளை வகித்து 50 ஆண்டு கால அனுபவம் பெற்றவன் நான். ஆனால் இன்றைக்கு ஒருவர் இருக்கிறார். படிப்படியாக வந்தேன் என்று சொல்லிக் கொண்டு உருண்டு வந்தார். அவரை பார்த்து நாடே சந்தி சிரிக்கிறது. அண்ட புளுகு ஆகாச புளுகு என்பதை கேள்வி பட்டிருப்பீர்கள். சசிகலாவால் முதல்வர் ஆன எடப்பாடி பழனிசாமிதான் ஜெயலலிதாவால் முதல்வர் ஆனதாக சொல்கிறார். பழனிசாமி சேலத்தில் வெல்லமண்டி வைத்து கமிஷன் அடித்தவர். தமிழ்நாட்டிற்கு 6 லட்சம் கோடி கடன் உள்ளது. திமுக ஆட்சியின்போது 1 லட்சம் கோடி கடன் இருந்தது. கடந்த 10 வருடத்தில் இவ்வளவு கடன் பெருகியுள்ளது. ஒரு முறை நான் கோயிலுக்கு சென்ற போது அங்கிருந்த பெண்மணி ஒருவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மனதில் கொண்டு அவரின் சொந்த ஊரான பொள்ளாச்சியை சொல்வதற்கு தயங்கினார். முதல்வர் பழனிசாமி மீது ஆர்.எஸ்.பாரதி டெண்டர் விவகாரத்தில் ஒரு வழக்கு ஒன்றை தொடுத்தார். பழனிசாமி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய துறையில் அவரது உறவினருக்கு டெண்டர் விட்டு ஊழல் செய்தார் என்று நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. பழனிசாமி உடனே டெல்லியில் தடை உத்தரவை வாங்கினார். அவர் தடை வாங்காமல் இருந்தால் அவர் சிறைக்குள் இருந்திருப்பார். ” என்றார்.
http://dlvr.it/RvskGJ
Thursday, 18 March 2021
Home »
» ”சேலத்தில் வெல்லமண்டி வைத்து கமிஷன் அடித்தவர் பழனிசாமி” - ஸ்டாலின் விமர்சனம்