காயத்ரி மந்திரத்தால் கொரோனா பாதிப்பு குணமாகுமா என்பது பற்றிய ஆய்வுக்கு ரிஷிகேஷ் எய்ம்ஸின் அறிவியல் அமைச்சகம் நிதியுதவி அளித்திருக்கிறது. இந்து மதப்பாடலான காயத்ரி மந்திரம் மற்றும் யோகாசனத்தின் பிராணயாமா மூலமாக கோவிட்-19 ஐ விரைவாக குணப்படுத்த முடியுமா, கொரோனா நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க இவை உதவிசெய்யுமா என்பது பற்றி ஆய்வுசெய்ய, ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையின், மருத்துவம் மற்றும் சோதனைத் துறை (டிஎஸ்டி) நிதியுதவி அளித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மருத்துவ சோதனை பதிவேட்டில் (மனித சோதனைகளுக்கு ஒரு கட்டாயத் தேவை) முறையாக பதிவுசெய்யப்பட்ட மருத்துவ சோதனையாக இது உள்ளது. இதன்படி “மிதமான அறிகுறிகளுடன்” உள்ள 20 கோவிட்-19 நோயாளிகளிடம் இந்த சோதனை நடத்தப்படவுள்ளது. இந்த நோயாளிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு குழுவுக்கு வழக்கமான நிலையான சிகிச்சை அளிக்கப்படும், மற்றொரு குழுவுக்கு, நிலையான சிகிச்சையுடன், ஒரு சான்றளிக்கப்பட்ட யோகா பயிற்றுவிப்பாளரால் மேற்பார்வையிடப்படும் 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமா பயிற்சிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி சோதனையில் ஈடுபட்டுள்ள குழுக்களில் வேறுபாடுகள் உள்ளதா என்பதை இது மதிப்பீடு செய்யும், அவர்களின் உடல் சோர்வு மற்றும் மனநலப்பிரச்னைகள் குறித்தும் மதிப்பீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எய்ம்ஸில் நுரையீரல் நிபுணரும் இணை பேராசிரியருமான டாக்டர் ருச்சி துவா, இது குறித்த ஆய்வுக்கு டிஎஸ்டியிலிருந்து நிதி பெற விண்ணப்பித்திருந்தார். ஆய்வை நடத்துவதற்காக அவருக்கு ₹ 3 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/Rw1v77
Saturday, 20 March 2021
Home »
» காயத்ரி மந்திரத்தால் கொரோனா குணமாகுமா? - ஆய்வுக்கு அரசு நிதியுதவி