மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வீல் சேரில் அமர்ந்தபடி பரப்புரை மேற்கொண்டுள்ளார். அந்த படம் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் எட்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனியாகவும், பாஜக தனியாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும் போட்டியிடுகிறது. மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பரப்புரையில் ஈடுபட்டபோது மர்ம நபர்கள் தாக்கியதால் காலில் காயம் பட்டார். தொடர்ந்து மருத்துவமனையிலும் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள காந்தி மூர்த்தி பகுதியிலிருந்து ஹஸ்ரா பகுதி வரையில் உள்ள 5 கிலோ மீட்டர் சாலையை வீல் சேரில் அமர்ந்தபடி பயணித்து, பரப்புரை மேற்கொண்டார். “எனக்கு இந்த காயம் அதிக வலியை கொடுக்கிறது. ஆனால் அதை காட்டிலும் என் மக்கள் படுகின்ற வேதனையும், வலியும் அதிகம் என்பதை உணர்ந்து தற்போது களத்திற்கு வந்துள்ளேன்” என மம்தா அப்போது தெரிவித்திருந்தார். West Bengal: CM Mamata Banerjee holds a roadshow from Gandhi Murti in Kolkata to Hazra.#WestBengalElections2021 pic.twitter.com/SbmwSlOZ74 — ANI (@ANI) March 14, 2021 நன்றி : ANI
http://dlvr.it/RvcCy9
Sunday, 14 March 2021
Home »
» வீல் சேரில் அமர்ந்தபடி பரப்புரை மேற்கொண்ட மம்தா பானர்ஜி!