உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் 24 வயது இளம் பெண் ஒருவர் தன்னுடைய கணவரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அந்த நபர் மனைவியின் பிறப்புறுப்பை பகுதியை அலுமினிய நூலால் தைத்துள்ளார்.வன்கொடுமை
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், தன் மனைவி திருமணத்துக்கு பிறகு வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து, தகாத வார்த்தைகளில் பேசியும், அடித்தும் துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று, மனைவியின் இரு கை, கால்களையும் கயிற்றால் கட்டிவிட்டு அப்பெண்ணின் பிறப்புறுப்பை அலுமினிய நூலால் தைத்துள்ளார். இரத்த வெள்ளத்தில் மிதந்த அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டுத் தப்பித்துச் சென்றார்.
பிறகு அப்பெண்ணின் தாய் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் சில மணி நேரங்களில் கைது செய்யப்பட்டார்.வன்கொடுமை
இதுகுறித்து மிலாக் நகர வட்டார அலுவலர் ஸ்ரீகாந்த் பிரஜபதி தெரிவிக்கும்போது, `` அப்பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையானவர். அறுவடை வாகன ஓட்டுநரான இவர், அறுவடைக் காலங்களில் பணிக்குச் சென்று விடுவார். வீட்டிலிருந்த அவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இது போன்ற செயலை செய்துள்ளார். அவர் இது குறித்து சிறிதும் குற்ற உணர்வு கொள்ளவில்லை.” என்றார்.
ராம்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் கூறும்போது,`` மருத்துவ அறிக்கையில், அந்த பெண்ணின் உடல் உறுப்புக்கள் மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என்றார்.அந்த பெண்ணின் கணவர் குமாரின் மீது இந்தியத் தண்டனை சட்டம் 326, 323,498A,506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அப்பெண், ``என்னுடைய கணவர் காரணமே இன்றி என்னை அடிப்பார். அவருக்கு நான் திருமணம் தாண்டிய உறவில் இருப்பேன் என்ற சந்தேகம். இதுபோன்று அவர் நடந்து கொள்வர் என்று ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை” என்றார்.
http://dlvr.it/Rw7r3b
Monday, 22 March 2021
Home »
» உத்தரப்பிரதேசம் - மனைவியின் நடத்தையில் சந்தேகம்; கணவன் செய்த கொடூரம்!