மும்பையில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மும்பை மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் காட்டுத்தீ போன்று கொரோனா பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் 50 சதவீதம் அளவுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மும்பையை தவிர்த்து மும்பை அருகில் உள்ள அனைத்து நகரங்களிலும் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் 15ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை முழுமையான பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புறநகர் ரயில் மூலம் தான் அதிக அளவில் கொரோனா பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிறந்த நாள் கேக்
கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவில் தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. மும்பையிலும் தினமும் 1000 பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது.
நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 15,817 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த அக்டோபருக்கு பிறகு இப்போதுதான் இந்த அளவுக்கு கொரோனா வேகமாக பரவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மும்பை மண்டத்தில் 3,137 பேருக்கு புதிதாக கொரோனா பரவி இருக்கிறது. இதனால் அதனை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் போது மும்பை அருகில் உள்ள டோம்பிவலியில் வாலிபர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்து வரும் காளை மாட்டிற்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கிறார். பிறந்த நாளுக்கு தனது நண்பர்கள் ஏராளமானோரை அழைத்திருந்தார். பிறந்தநாள் கொண்டாடிய காளை
கிரண் மாத்ரே என்ற அந்த வாலிபரின் காளையின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற யாரும் கொரோனா விதிகளை கடைப்பிடிக்கவில்லை. யாரும் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. அதோடு ஏராளமான அளவு பட்டாசுகள் வெடித்து தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். கேக்கும் வெட்டப்பட்டது. கேக்கை மாட்டிற்கு கொடுத்து பிறந்தநாள் வாழ்த்தும் பாடினர். இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்திலும் பின்னர் வெளியிட்டனர். திடீரென பட்டாசு வெடித்ததில் என்னவென்று பக்கத்தில் உள்ளவர்கள் விசாரித்த போதுதான் விசயம் தெரிய வந்தது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து யாரோ போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்த போது யாரும் கொரொனா விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து கிரண் மாத்ரே மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிறந்த நாள் விழாவிற்கு 100 பேருக்கும் மேல் வந்திருந்தனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாடி விட்டு ஆட்டம் பாட்டம் என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். டோம்பிவலியிலும் கொரோனா காரணமாக 50% கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
http://dlvr.it/RvYZVf
Saturday, 13 March 2021
Home »
» மும்பை: கொரோனா கட்டுப்பாட்டை மீறி காளைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்! - போலீஸார் வழக்குப்பதிவு