நாடு முழுவதும் தற்போது இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் இத்தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மும்பையில் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சில நிமிடங்களில் சுருண்டு விழுந்து உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஜோகேஷ்வரியில் உள்ள மில்லத் நர்சிங் ஹோமில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இங்கு 65 வயது முதியவர் ஒருவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தார். அவருக்குத் தடுப்பூசி போட்ட பிறகு அங்குள்ள ஒரு சேரில் அமர்ந்திருந்தார். ஆனால் தடுப்பூசி போட்ட சில நிமிடங்களில், சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். உடனே அவர் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஒன்றரை மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.Corona Vaccine
அவரது உடல் கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவரது மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த முதியவருக்கு ஏற்கெனவே இருதய பிரச்னை, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இருந்தன.
இந்த மரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை நிர்வாக அதிகாரி டாக்டர் மங்களா கூறுகையில், 'கொரோனா தடுப்பூசியால்தான் முதியவர் இறந்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அக்கமிட்டி அனைத்து அம்சங்கள் குறித்தும் விசாரிக்கும்' என்று தெரிவித்தார்.Corona Vaccine
மகாராஷ்டிராவில் இதுவரை 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 400 பேருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி என்ற இடத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 40 வயது நபர் உயிரிழந்தார். நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 40 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
http://dlvr.it/RvFzh6
Tuesday, 9 March 2021
Home »
» மும்பை: கொரோனா தடுப்பூசி போட்ட பின் மருத்துவமனையிலேயே உயிரிழந்த முதியவர்... காரணம் என்ன?