"சமூக மாற்றத்தைக் கொண்டு வருகிறோம் என்று கூறி நோட்டாவுக்கு ஓட்டுப் போட்டு கேவலப்படுத்தக் கூடாது” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ஆவடியில் தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், "அரசியல் என்பதனை மக்களுக்கு சேவையாற்றும் ஒரு தொண்டு என்பதனை, பணம் சம்பாதிக்கும் கம்பெனியாகவும் மாற்றிவிட்டார்கள். அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். ஒட்டு போடவில்லையென்றால் தேச துரோகம். யாருக்காவது ஓட்டு போடுங்கள். பெரிய புரட்சிக்கர சிந்தனையாளர் மாதிரி, நாங்க தான் சமூக மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்று கூறி நோட்டாவிற்கு ஓட்டுப்போட்டு கேவலப்படுத்தக்கூடாது. அதிமுக திமுகவினர் ஒரு கோடி, இரண்டு கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனால் ஏன் அவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டும். பெரிய கட்சிக்காரர்கள் 56 கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறார்கள். நான் காட்டுக்குள் திரியும் புலி போன்று சிங்கிளாக வருவேன். என்னை கூட்டணி வைக்க சொல்கிறார்கள். 10 சீட்டு, 20 சீட்டுகளுக்கான என் தம்பி தங்கைகளை அடமானம் வைக்க மாட்டேன். கொள்கைக்காக தன்மானம் காப்பேன். அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி வைத்தால் என்னை கரைத்து விடுவார்கள். வைகோ, திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோரை கரைத்தது போல் என்னையும் கரைத்து விடுவார்கள். நான் மெதுவாக வருவேன். ஆனால் பொதுவாக வருவேன்” என்று சீமான் பேசினார்.
http://dlvr.it/RwhWlH
Wednesday, 31 March 2021
Home »
» "யாருக்காவது ஓட்டு போடுங்கள், நோட்டோவுக்கு போடாதீர்கள்!" - சீமான்