மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிய கட்டுப்பாடுகளால் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. கொரானாவுக்கு மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 60 ஆயிரம் பேர் வரை இறந்துவிட்டனர். இதனால் மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த மும்பை போலீஸாரும் புதிய நடவடிக்கையை எடுக்க ஆரம்பித்துள்ளனர். எவ்வளவுதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும் மக்கள் வெளியில் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். அதுவும் வாகனங்கள் அதிக அளவில் வெளியில் வருகிறது. Commissioner Hemant Nagrale
இதனால் அவசர மற்றும் அத்தியாவசியப்பணிக்கு செல்பவர்களின் வாகனங்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்கிறது. இதையடுத்து இதற்கு தீர்வு காண் போலீஸார் சிவப்பு, பச்சை, மஞ்சள் கலர் ஸ்டிக்கர் ஒட்ட முடிவு செய்துள்ளனர். டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதார பணியாளர்கள் செல்லும் வாகனங்கள், மருந்து எடுத்து செல்லும் வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்றவற்றிற்கு சிவப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.
பால், காய்கறிகள், பேக்கரி பொருட்கள், பழங்கள் எடுத்துச்செல்லும் வாகங்களில் பச்சை கலர் ஸ்டிக்கர் ஒட்டப்படும். மாநகராட்சி ஊழியர்கள், டெலிபோன் மற்றும் மருந்து கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் செல்லும் வாகனங்களுக்கு மஞ்சள் கலர் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்த ஸ்டிக்கர்களை உள்ளுர் போலீஸ் நிலையத்தில் இலவசமாக வாங்கிக்கொள்ளலாம். இது போன்ற வாகனங்களில் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக்கொள்வதை தவிர்க்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மும்பையில் கொரோனா அதிகமாக இருக்கும் கட்டடங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். கொரோனா பாதித்த நோயாளிகளில் 80 சதவீதம் பேர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். இதனால் குடியிருப்பு கட்டடங்களில் அதிக அளவில் கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். அது போன்ற கட்டடங்களை கண்டுபிடித்து சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,169 கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இது இம்மாத தொடக்கத்தில் 650 ஆக இருந்தது.
ஆனால் சில நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. ஒரு கட்டடத்தில் 5 கொரோனா நோயாளிகள் இருந்தால் அக்கட்டடத்தை தனிமைப்படுத்தி சீல் வைத்து வருகின்றனர். அந்தேரி, மலபார்ஹில், கிர்காவ் போன்ற பகுதியில் தான் அதிகப்படியான கட்டடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை முழுவதும் மொத்தம் 1.57 லட்சம் வீடுகள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. இதில் 5.9 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் உத்தவ் தாக்கரே
இது தவிர மும்பையில் 97க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 4.5 லட்சம் மக்கள் இருக்கின்றனர். இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிரதமர், மேற்கு வங்க தேர்தலில் கவனம் செலுத்துவதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இரண்டு முறை ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக பேச பிரதமருக்கு தொடர்பு கொள்ள முயன்றதாகவும், ஆனால் பிரதமர் தேர்தல் வேலையில் பிஸியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது என்று உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.
http://dlvr.it/Rxvvzb
Sunday, 18 April 2021
Home »
» கொரோனா: மும்பையில் 1,100 கட்டடங்களுக்கு சீல் ; `பிரதமர் தேர்தலில் பிஸி’- உத்தவ் தாக்கரே காட்டம்