இந்தியாவில் ஒரே நாளில் 1,15,736 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,26,86,049 –லிருந்து1,28,01,785 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 630 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 1,65,547 -லிருந்து 1,66,177 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்தனர். நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,17,32,279 –லிருந்து 1,17,92,135 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8,43,473 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா முதல் அலையின்போது 2020 செப்.17-ல் அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பு 98,795 ஆக இருந்ததும், 6 மாதங்களுக்குப் பின் கொரோனா 2ஆம் அலையில் ஏப்ரல் 5-ஆம் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,03,558 ஆக உயர்ந்தது. இந்த சூழலில் தற்போது ஒருநாள் பாதிப்பு 1,15,736 ஆக உயர்ந்திருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் முதலாவது அலை கடந்த ஓராண்டு காலமாக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை மீண்டும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
http://dlvr.it/Rx90Ny
Wednesday, 7 April 2021
Home »
» இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சம்: ஒரேநாளில் 1,15,736 பேர் கொரோனாவால் பாதிப்பு