கேரள மாநிலம் கொச்சி போலீஸாருக்கு கள்ள நோட்டு தொடர்பாக ஓர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் கோவைப் பகுதிகளில் சிலர் ரூ.2,000 கள்ள நோட்டைப் புழக்கத்தில்விடுவதாகத் தகவல் கிடைத்தது. இது குறித்து, இரண்டு மாநில போலீஸாரும் கடந்த சில வாரங்களாக தீவிரமாக விசாரித்துவந்தனர்.கோவை
Also Read: காதல் ஜோடியைத் தேடிச் சென்றபோது சிக்கிய கள்ளநோட்டு கும்பல் - கோவை அதிர்ச்சி!
இதில் சம்பந்தப்பட்ட ஒரு நபர் கோவையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில், கேரள போலீஸ் தனிப்படையினர் செவ்வாய்கிழமை கோவை வந்தனர்.
இதையடுத்து, கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியிலுள்ள அஸ்ரஃப் அலி (24) என்பவரை மடக்கிப்பிடித்தனர். அஸ்ரஃப் கொடுத்த தகவலின் அடிப்படையில், உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியிலுள்ள சையது சுல்தான் (32) என்பவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனர்.சுல்தான் வீடு
தொடர்ந்து, சுல்தான் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீஸார் இணைந்து தீவிர சோதனை நடத்தினார்கள். அந்தச் சோதனையில் ரூ. 1.8 கோடி மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தது... யார் யாருக்கு புழக்கத்தில் விடப்பட்டன... இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். மேலும், கைதான இரண்டு பேரையும் விசாரணைக்காக கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். இன்று காலை இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் சுல்தானின் கூட்டாளிகளான மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். சுல்தான், அஸ்ரஃப்
முதற்கட்ட விசாரணையில், இவர்கள் அல்-அமீன் காலனி பகுதியிலுள்ள கடைகளில், கடந்த மூன்று மாதங்களாகக் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில்விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் ஏற்கெனவே, கடந்த 2018-ம் ஆண்டு 2,000 ரூபாய் பணத்தை கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டாகப் புழக்கத்தில்விட்ட கும்பல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RyBxSl
Thursday, 22 April 2021
Home »
» கேரளா டு கோவை: கட்டுக் கட்டாக 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள்! - அதிரவைக்கும் நெட்வொர்க்