சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனின் பத்தாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது பெங்களூர். What a start this is for #KKR.@chakaravarthy29 picks up two big wickets in his first over.Virat Kohli and Patidar depart in quick succession.Live - https://t.co/sgj6gqp6tS #RCBvKKR #VIVOIPL pic.twitter.com/cujexjQZ4A — IndianPremierLeague (@IPL) April 18, 2021 அந்த அணிக்காக தேவ்தத் படிக்கல் மற்றும் விராட் கோலி இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே கோலி மற்றும் ராஜாத் பட்டிதார் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது பெங்களூரு. அந்த ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசி இருந்தார். பின்னர் வந்த மேக்ஸ்வெல், படிக்கலுடன் 86 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார். இருப்பினும் படிக்கல் 28 பந்துகளுக்கு 25 ரன்களில் அவுட்டானார். அவரை பிரசித் கிருஷ்ணா வீழ்த்தி இருந்தார். தொடர்ந்து 360 டிகிரி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் களத்திற்கு வந்தார். மேக்ஸ்வெல் - டிவில்லியர்ஸ் இணையர் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேக்ஸ்வெல் 49 பந்துகளில் 78 ரன்களை குவித்து அவுட்டானார். அவரது இன்னிங்க்ஸில் 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். கம்மின்ஸ் அவரை வீழ்த்தி இருந்தார். #RCB lose two wickets in the powerplay with 45 runs on the board.Live - https://t.co/sgj6gqp6tS #RCBvKKR #VIVOIPL pic.twitter.com/1nQEzBy8p8 — IndianPremierLeague (@IPL) April 18, 2021 பின்னர் ஜேமிசன் களத்திற்கு வந்தார். டிவில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 76 ரன்களை குவித்து இறுதி வரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அதோடு ஜேமிசன் - டிவில்லியர்ஸ் 56 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். இதையடுத்து கொல்கத்தா அணி 205 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.
http://dlvr.it/RxxSpL
Monday, 19 April 2021
Home »
» மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!