தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்தை சார்ந்துள்ள இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே ஆம்னி பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் கடும் நஷ்டத்தில் இயங்குவதாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். தற்போது இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும்போது, ஆம்னி பேருந்துகள் முற்றிலும் பாதிக்கப்படும் எனக் கூறுகின்றனர். 480 கோடி ரூபாய்வரை ஏற்கனவே இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 20 கோடி அளவுக்கு மட்டுமே சாலை வரியை அரசு தள்ளுபடி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும் அதே வேளையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
http://dlvr.it/Ry1DPd
Tuesday, 20 April 2021
Home »
» இரவு நேர ஊரடங்கால் ஆம்னி பேருந்துகள் முடக்கம் - 2 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்பு