உத்திரப்பிரதேச மாநிலத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 534 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (National Security Act-NSA) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக, அந்த மாநிலத்தின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்திருக்கிறது.உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
இது குறித்த அதிகாரபூர்வமான தகவலை நேற்று (செவ்வாய் கிழமை) வெளியிட்ட அரசு செய்தித் தொடர்பாளர், ``மொத்தம் 534 பேர் மீது போடப்பட்ட வழக்குகளில் 106 பேர் மீதான வழக்குகள் ஆலோசனைக்குழுவால் (Advisory Board) நிராகரிக்கப்பட்டன. 50 பேர் மீதான வழக்குகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன" எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், குறிப்பாக 2018-ம் ஆண்டில் 184 பேர் மீதும், 2019-ம் ஆண்டில் 128 பேர் மீதும், அதிகபட்சமாக 2020-ம் ஆண்டு 222 பேர் மீதும் தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின் (NSA) கீழ் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சேர்ந்து வழக்கு பதிந்திருக்கின்றன.
அதில், 2018-ல் 38 வழக்குகளையும், 2019-ல் 21 வழக்குகளையும், 2020-ம் ஆண்டில் 47 வழக்குகளையும் ஆலோசனைக்குழு நிராகரித்திருக்கிறது. அதேபோல் அலகாபாத் நீதிமன்றமும் 2018, 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் முறையே 23, 24 மற்றும் 3 பேர் மீதான வழக்குகளை ரத்து செய்துள்ளது.அலகாபாத் நீதிமன்றம்
இந்த வழக்குகள் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, ``NSA வழக்கு போடப்பட்டவர்கள் பெரும்பாலும் பசுவதை (Cow Slaughter) தொடர்பான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள்” என்றார். மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும், பிற குற்றங்களும் இதில் அடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச அரசால் போடப்பட்ட பெரும்பான்மையான NSA வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம், `Misuse of the NSA law’ அதாவது தேசியப் பாதுகாப்புச் சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படுகிறது என்று கருதி பலமுறை தள்ளுபடி செய்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RxCFXG
Thursday, 8 April 2021
Home »
» பசுவதைக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டம்! - 3 ஆண்டுகளில் 534 பேர் மீது வழக்கு போட்ட உத்தரப்பிரதேச அரசு