நாட்டிலேயே கொரோனா தாக்கம் அதிகமுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை என்ற நிலை இருந்து வருகிறது. இந்த இடைவெளியில் பாஜக உள்ளே புகுந்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் ஏற்கனவே விதித்திருந்த கட்டுப்பாடுகளை வரும் மே 15ம் தேதி வரை அரசு நீட்டித்து இருக்கிறது. மும்பையில் மட்டும் ஓரளவுக்கு கொரோனா கட்டுக்குள் வந்திருக்கிறது. மாநில அளவில் தினத்தொற்று 60 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் வரை இருந்து கொண்டிருக்கிறது.ராஜேஷ் தோபே
கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ்தாக்கரே மாவட்ட ஆட்சித்தலைவர்கள், மாநகராட்சி கமிஷனர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய உத்தவ்தாக்கரே, மாவட்ட நிர்வாகம் ஆக்சிஜன் உற்பத்தி திட்டங்களை உடனே தொடங்கவேண்டும். கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தேவையான அளவு கையிருப்பு வைக்கவேண்டும். கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள மிகவும் கவனத்துடன் மாவட்ட நிர்வாகம் திட்டமிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் முதல்வர் அலுவலகம் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் முதல்வரின் உத்தரவை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனாவின் முன்றாவது அலை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இருக்கும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "மருத்துவ வல்லுநர்கள் மகாராஷ்டிராவில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனாவின் மூன்றாவது அலை இருக்கும் என்று கணித்துள்ளனர். எனவே அதற்குள் அதனை எதிர்கொள்ள மருத்துவ ஆக்சிஜனில் தன்னிரைவு அடைய முயன்று வருகிறோம். தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு மே இறுதியில் குறையும். மாநிலம் முழுவதும் 125 ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற புகார் வராமல் பார்த்துக்கொள்ளும்படி முதல்வர் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். அதோடு மாவட்ட மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ.மெஷின் போன்றவை இருப்பதை உறுதி செய்து வருகிறோம். 18 வயது முதல் 44 வயது வரையிலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் உடனடியாக தொடங்க வாய்ப்பு இல்லை. ஐந்து நாட்களுக்கு தேவையான 30 லட்சம் டோஸ் கையிருப்பு இருந்தால் மட்டுமே அதனை தொடங்க முடியும். தடுப்பூசிக்கு தேவையான பணத்தை அரசு கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் தடுப்பூசி தடையில்லாமல் கிடைக்கவேண்டும். போதுமான தடுப்பூசி கிடைத்தால் தினமும் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தேவையான கட்டமைப்பு வசதி மகாராஷ்டிராவில் இருக்கிறது என்று தெரிவித்தார். இதனால் மே மாத இறுதியில்தான் மகாராஷ்டிராவில் உள்ள 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கிடையே மும்பையில் மே 2ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி போடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போதிய அளவு தடுப்பூசி இல்லாத காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தேவையில்லாமல் வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
http://dlvr.it/Rylz2F
Friday, 30 April 2021
Home »
» மஹாராஷ்டிரா: 'ஜூலையில் கொரோனா 3-வது அலை; எதிர்கொள்ளத் தயாராவோம்!'- முதல்வர் உத்தவ் தாக்கரே