மும்பை தாராவியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வந்தவர் சச்சின் ஜெய்ஸ்வர்(17). கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி சாதாரண உடையில் சச்சின் வீட்டிற்கு வந்த போலீஸார் சச்சின் எங்கே என்று கேட்டுள்ளனர். வீட்டில் சச்சின் பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்தார். எதற்காக கேட்கிறீர்கள் என்று போலீஸாரிடம் கேட்டதற்கு, மொபைல் போன் திருட்டு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மறுநாள் போலீஸார் மீண்டும் வந்து சச்சினை விசாரிக்கவேண்டும் என்று கூறி அழைத்து சென்றனர். போலீஸார் அழைத்து சென்ற மறுநாள் சச்சின் திரும்ப வந்தார். அவர் தனது உடல் கடுமையாக வலிப்பதாக தெரிவித்தார். உடல் வலி அதிகரிக்கவே அவரை சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சச்சின் 21ம் தேதி இறந்து போனார். தங்களது மகனை போலீஸார் கொடூரமாக அடித்து உதைத்ததால்தான் இறந்து போனதாக கூறி சச்சின் உடலை வாங்க மறுத்தனர். சச்சின்
இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் சச்சினை போலீஸார் துன்புறுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை சச்சின் பெற்றோர் ஏற்கவில்லை.
உடலை பெற்றுக் கொள்ளாமல் இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி மணீஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. விசாரணையில் சச்சின் குடும்பத்தினர் மற்றும் அரசு வழக்கறிஞர் தரப்பினரின் கருத்தை கேட்ட பிறகு சச்சின் உடலை மீண்டும் இரண்டாவது முறையாக பிரேதபரிசோதனைக்கு உத்தரவிட்டனர். மேலும் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்று இறுதிச்சடங்குகளை செய்வதாக சச்சின் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மரணம்
3 நாட்களில் பிரேத பரிசோதனை நடத்தவேண்டும் என்றும் ஏற்கனவே பிரேத பரிசோதனை நடத்தியவர்கள் இரண்டாவது பிரேத பரிசோதனையில் இடம் பெறக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இது குறித்து சச்சின் தந்தை ரவீந்திர ஜெய்ஸ்வர் கூறுகையில், ``இரண்டரை ஆண்டுகள் போராடிய எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இப்போது ஏற்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
http://dlvr.it/Rx1mHK
Monday, 5 April 2021
Home »
» மும்பை: காவலர்கள் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தாரா? - 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரேத பரிசோதனை