ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, கொரோனா பரவல் காரணமாக 2 மாதங்கள் தாமதமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி, தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸின் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய 2 இடங்களில் ஆஸ்கர் விருது விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் விருந்தினர்களாக பங்கேற்க உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சிறந்த இயக்குனர் விருதை 'Nomadland' படத்துக்காக சீன பெண் இயக்குனர் க்ளோயி சாவ் பெற்றார். சிறந்த துணை நடிகை Judas and the Black Messiah படத்துக்காக டேனியல் கல்லூயா பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருதை Promising Young Woman படத்துக்காக எமரால்டு பென்னல் பெற்றார். சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை The Father படத்துக்காக கிறிஸ்டோபர் புளோரியன் பெற்றார். சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதை Another Round பெற்றது. தொடர்ந்து பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சி ஆஸ்கார் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் ஆஸ்கார் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
http://dlvr.it/RySMFs
Monday, 26 April 2021
Home »
» 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா; சிறந்த இயக்குநர் விருது வென்றார் குளோயி சாவ்