ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா என்று விரிவாக விளக்குகிறார் தொற்றுநோய் மருத்துவ நிபுணர் சுப்பிரமணியன். இதுபற்றி புதிய தலைமுறையிடம் பேசிய தொற்றுநோய் மருத்துவ நிபுணர் சுப்பிரமணியன் “உலக சுகாதார மையமே ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சைக்கு மிக முக்கியமான மருந்து என்று சொல்லவில்லை. அதுபோல ரெம்டெசிவிர் மருந்து கொரோனா உயிர்சேதத்தை குறைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நாங்கள் ரெம்டெசிவிர் இல்லாமலேயே கொரோனா நோயாளிகளை சிறப்பாக குணப்படுத்தி வருகிறோம். ரெம்டெசிவிர் நல்ல மருந்துதான், ஆனால் ஸ்டீராய்டு அளவுக்கு முக்கியமாக மருந்து இல்லை. இந்த மருந்துக்காக மக்களிடம் பீதியை உருவாக்கவேண்டிய தேவை இல்லை. ரெம்டெசிவிர் மருந்து குறைந்த நோய் அறிகுறிகளுடன், ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகள் அல்லது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்ட கொரோனா நோயாளிகளுக்கு பயன் தராது. அதேபோல மிகவும் அதிக பாதிப்புடன் வெண்டிலேட்டரில் உள்ள நோயாளிகளுக்கும் இந்த மருந்து தேவைப்படாது. ஆக்சிஜன் செலுத்தும்போது சிலருக்கும் மட்டுமே தேவைப்படலாம். எனவே இது குறித்து மக்கள் பயப்படவே தேவையில்லை. மத்திய சுகாதார அமைச்சகம் தனது ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா மருந்துகள் பற்றிய வழிகாட்டுதல்களை ஜூலை 2020-க்கு பிறகு புதுப்பிக்கவே இல்லை. நாட்டில் இத்தனைப் பெரிய நெருக்கடி நிலவும் சூழலில் இந்த வழிகாட்டுதல்களைக்கூட அமைச்சகம் புதுப்பிக்கவில்லை என்பதால் மருத்துவர்களுக்கு ரெம்டெசிவர் பற்றிய புரிதல் இல்லை. எனவே இது அந்த அமைச்சகத்தின் குறைபாடுதான்” எனத் தெரிவித்தார்
http://dlvr.it/Ryc2pK
Wednesday, 28 April 2021
Home »
» ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? - தொற்றுநோய் மருத்துவ நிபுணர் விளக்கம்
ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துமா? - தொற்றுநோய் மருத்துவ நிபுணர் விளக்கம்
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!