மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்துவருவதால், மருத்துவக் கட்டமைப்பு வசதிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதிய அளவு மருத்துவமனையில் படுக்கை வசதி, ஆக்ஸிஜன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற நகரங்களில் அதிக அளவு கொரோனாவின் தாக்கம் இருக்கிறது. போதிய அளவுக்குப் படுக்கை வசதி இல்லாமல் இருப்பதால் நோயாளிகளைப் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மும்பை அருகிலுள்ள கல்யாணில் வசித்துவந்த நாகேந்திர மிஸ்ராவும், அவரின் மகன் சூரஜ் மிஸ்ராவும் டாக்டர்களாக இருந்தனர். இவர்களுக்கும் நாகேந்திர மிஸ்ரா மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்க வென்டிலேட்டர் வசதியுடன்கூடிய படுக்கை வசதி இல்லாமல் இருந்தது. இதனால் மூன்று பேரும் வேறு வேறு இடங்களிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். கொரோனா
டாக்டர் நாகேந்திரா தானேயிலுள்ள ஒரு மருத்துவமனையிலும், அவர் மகன் சூரஜ் மும்பை மேற்கு புறநகரில் இருக்கும் கோரேகாவ் மருத்துவமனையிலும், நாகேந்திரா மனைவி மும்பையிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வசாய் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். ஆக்ஸிஜன் அளவு மூவருக்கும் குறைவாக இருந்தது. மிஸ்ராவும் அவர் மகனும் தனித்தனியாக மருத்துவமனை நடத்திவந்தாலும், கொரோனாவுக்குச் சிகிச்சை பெற வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால், சிகிசை பலனலிக்காமல் நாகேந்திரா தான் பிறந்த தினத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அவர் இறந்த அடுத்த சில மணி நேரத்தில் அவர் மகன் சூரஜும் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். தந்தையும் மகனும் சிகிச்சை பலனலிக்காமல் அடுத்தடுத்து இறந்திருப்பது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாகேந்திராவின் மனைவிக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. நாகேந்திராவின் மற்றொரு மகனும் டாக்டராக இருக்கிறார். இறந்துபோன இரண்டு பேருக்கும் கடந்த ஆறு நாள்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதிலிருந்து அவர்களின் நிலைமை மோசமாகிக்கொண்டேதான் வந்தது. இதில் சூரஜ் கடந்த ஆண்டு, நவம்பர் மாதம்தான் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புனேயிலும் படுக்கைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கொரோனா
புனே வார்ஜி என்ற இடத்தைச் சேர்ந்த 41 வயது ஷோபா என்ற பெண்ணுக்கு திடீரென மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கொரோனா சோதனை செய்து பார்த்ததில் கொரோனா இருப்பது தெரியவந்தது. உடனே வென்டிலேட்டர் படுக்கை வசதியுள்ள மருத்துவமனையில் சேர்க்கும்படி அந்த மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல மருத்துவமனைகளுக்குச் சென்றும் மருத்துவமனையில் படுக்கை காலி இல்லை என்று சொல்லிவிட்டனர். இதனால் ஷோபாவை அவரது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். இரவில் ஷோபா மன அழுத்தம் காரணமாகத் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் மிகவும் அவசியமாக இருக்கிறது. ஆனால், அதற்கு மும்பையில் மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, ஆக்ஸிஜனை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது குறித்து மகாராஷ்டிரா அரசு பரிசீலித்துவருகிறது. அண்டை மாநிலங்களிலும் ஆக்ஸிஜன் கொடுத்து உதவும்படி மகாராஷ்டிரா அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் மும்பை அருகிலுள்ள நாலாசோபாராவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒன்பது நோயாளிகள் சில மணி நேரத்தில் இறந்துபோனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சோனு சூட்
இதற்கிடையே நடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழ்ப் படங்களில் வில்லன் வேடத்தில் நடித்துள்ள சோனுசூட், கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து கொடுத்து அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். ஆனால் இப்போது அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். `எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் என்னை நானே தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று கேத்ரீனா கைஃப், ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்கோத்ரா உட்பட பாலிவுட் பிரபலங்களுக்குத் தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டுவருகிறது.
http://dlvr.it/Rxtj8c
Sunday, 18 April 2021
Home »
» மும்பை: படுக்கை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை; தந்தை-மகன் பலி... பெண் தற்கொலை! - உச்சத்தில் கொரோனா