மும்பையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாகன நெருக்கடியை கட்டுப்படுத்தவும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள், போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் இருக்க போலீசார் வாகனங்களுக்கு மூன்று வகையான ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் கலர் ஸ்டிக்கர்கள் போலீசாரால் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டு வருகிறது. மஞ்சள் கலர் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் டாக்டர்கள் செல்லலாம். பச்சை கலர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் காய்கறிகள் எடுத்துச்செல்ல முடியும். மஞ்சள் கலர் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் மாநகராட்சி ஊழியர்கள் செல்லலாம். Mumbai Police
தெளிவாகச் சொல்லியிருந்தாலும் எந்த கலர் ஸ்டிக்கர் வாகனங்களுக்கு ஒட்டவேண்டும் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. இது தொடர்பாக அடிக்கடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்புகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. பொதுமக்கள் சமூக வலைதளத்திலும் இது தொடர்பாக சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். போலீசார் அனைத்து கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதிலளித்து வருகின்றனர்.
இதற்கிடையே அஷ்வின் வினோத் எனும் இளைஞர் ட்விட்டரில், ''எனது காதலியை சந்திக்க வெளியில் செல்ல. வாகனத்தில் என்ன மாதிரியான ஸ்டிக்கர் பயன்படுத்தவேண்டும். எனது காதலியை நான் மிகவும் மிஸ் பண்ணுகிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள போலீசார், ''இது உங்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்று நாங்கள் புரிந்துள்ளோம் சார். ஆனால், இது அரசின் அத்தியாவசியம் அல்லது அவசர பிரிவின் கீழ் வராது. பிரிந்திருப்பது இதயங்கள் இடையேயான நெருக்கத்தை அதிகரிக்கும். நீங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம். இது தற்காலிகமான ஒன்றுதான்'' என்று போலீசார் பதிலளித்துள்ளனர். மும்பை போலீசாரின் இந்த பதில் அனைவருக்கும் ஆச்சர்யமளிக்கும் வகையில் இருந்தது. அதோடு போலீசாரின் இந்தப் பதிலுக்கு 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளன. மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத் உட்பட 10 மாநிலங்களில்தான் கொரோனா தொற்று அதிகமாக இருக்கிறது.
http://dlvr.it/RyK7Dn
Saturday, 24 April 2021
Home »
» கொரோனா பரவல்... காதலியை வெளியே அழைத்துச் செல்ல ஆலோசனைக் கேட்ட இளைஞர்... போலீஸின் பதில் என்ன?!