ஆக்சிஜன் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தருண்விஜய், "நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது 91 வயது அண்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை அளிக்க முடியாமல் தவித்து வருவதாகவும், எங்கு பார்த்தாலும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை கூட, "எங்களால் ஒன்றும் செய்ய இயலாது. வேண்டுமென்றால் உங்கள் அண்ணனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்" என்று கூறுவதாக குறிப்பிட்டுள்ள தருண் விஜய், "நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை" என கூறியுள்ளார். "பொதுமக்கள், எந்தவிதமான அதிகாரமோ வசதியும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?" எனவும் அவர் தனது வேதனையை ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அதன்பின்னர் வெளியிட்ட பதிவுகளில், கொரோனா 2-ம் அலையை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை மேற்கோள்காட்டி, பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டியிருந்தார் தருண் விஜய். நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/RyN4DK
Sunday, 25 April 2021
Home »
» 'நாடு செல்வது எங்கே?' - ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பாஜக மூத்த தலைவர் தருண் விஜய் வேதனை