மதுரை சித்திரை திருவிழாவில் திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 24-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும் அன்று பக்தர்கள் காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காலை 8.30 மணியளவில் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வின்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. ஆன்லைன் மூலமாக திருக்கல்யாண நிகழ்வினை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொடியேற்ற நடைபெறும் 15ம் தேதி காலை 6 மணி முதல் 9 மணி வரையும் பின்னர் 11.30 மணி முதல் 12.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
http://dlvr.it/Rxc2Ms
Wednesday, 14 April 2021
Home »
» மதுரை சித்திரை திருவிழா: திருக்கல்யாண நிகழ்விற்கு பின் பக்தர்களுக்கு அனுமதி!