கொரோனா தொற்று பாதிப்பு அதிதீவிரம் அடைந்துள்ள நிலையில், கர்நாடகா மாநிலத்தில் புதுப்பிரச்னை ஒன்று உருவாகியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்த மாநிலத்தில் அதிகம் இருந்தாலும் அதனால் ஏற்பட்ட இறப்புகள் குறைவாகத் தான் உள்ளன. ஆனால், இந்தச் செய்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கொடுக்கக்கூடியதாக இல்லை.கொரோனா உயிரிழப்பு
காரணம் உடலை எரிப்பதற்கான அல்லது புதைப்பதற்கான நேரம். இறந்தவர்களின் சடலங்களை எரிக்கவோ, புதைக்கவோ டோக்கன்கள் பெற்றுக்கொண்டு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பது பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பெரும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. இதற்குத் தீர்வாக கர்நாடக மாநிலம் தற்காலிக இடுகாடுகளுக்கான இடங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுவரை கர்நாடக மாநிலம் கோவிட் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. 21,794 புதிய தொற்றுகள் பதிவாகி உள்ளன. இதில் நேற்று மட்டுமே 149 மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. மற்ற மாநிலங்களைவிட மரண எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இடுகாட்டுப் பிரச்னை அதிகரித்துள்ளது.அமைச்சர் ஆர்.அசோகா
இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் இதற்குத் தேவையான தற்காலிக இடுகாடுகளை அமைத்து அதற்குத் தேவையான போர் கிணறு, தண்ணீர் வசதி, மின்சார இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி இருக்கிறார். இந்தத் தற்காலிக இடுகாடுகள், சடலங்களுடன் வரிசையில் காத்திருப்போருக்கென அமைக்கப்பட உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.
- லதா ரகுநாதன்
http://dlvr.it/RyFFW9
Friday, 23 April 2021
Home »
» கொரோனா மரணங்களால் காத்திருக்கும் சடலங்கள்... தற்காலிக இடுகாடுகளைத் தேடும் கர்நாடகா!