தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலிருந்து, கேரளாவுக்குள் செல்ல, இ-பாஸுடன், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்ற நடைமுறை நேற்று (20.04.2021) முதல் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது கேரள அரசு. கேரளாவின் இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டங்கள், தேனி மாவட்ட விவசாயிகளுக்குச் சொந்தமானதாக உள்ளன. மேலும், அந்த ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்பவர்கள், தேனி மாவட்டத்திலிருந்தே தினமும் ஜீப் மூலம் சென்றுவருகின்றனர். இந்தநிலையில், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள், இரு மாநில எல்லையைக் கடந்து கேரளாவுக்கும், தமிழகத்துக்கும் பயணம் செய்துவருகின்றனர்.கம்பம் மெட்டு
Also Read: கேரளா செல்ல கட்டாய இ-பாஸ்! - தளர்வுகள் இல்லை... தவிப்பில் ஏலக்காய் விவசாயிகள்
கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி ஆகிய மூன்று வழித்தடங்கள் மூலம், தேனி மாவட்டத்திலிருந்து, கேரளாவின் இடுக்கி மாவட்டத்துக்குள் செல்ல முடியும். இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவரும் சூழலில், யார் யாரெல்லாம் தங்கள் மாநிலத்துக்குள் வருகிறார்கள் என்பதைக் கண்காணிக்க, இ-பாஸ் முறையைக் கொண்டுவந்தது கேரள அரசு. குமுளி மற்றும் போடிமெட்டு எல்லைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறை கடைபிடிக்கப்பட்டாலும், சில நேரங்களில், மக்கள் பாஸ் இல்லாமலும் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.கம்பம் மெட்டு
இந்தநிலையில், கம்பம் மெட்டு எல்லைப்பகுதி வழியாக கேரளாவுக்குள் வருபவர்களுக்கு மட்டும் இ-பாஸுடன், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என உத்தரவு பிறப்பித்துள்ளது கேரள அரசு. இது தொடர்பாக, இடுக்கி மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே எல்லை தாண்டி அனுமதிக்கின்றனர். இ-பாஸ் மட்டும் வைத்திருக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இதனால், ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்லும் விவசாயிகள் மற்றும் தினக்கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Also Read: இடுக்கி கனமழை: `நீரில் மூழ்கிய ஏலக்காய் தோட்டங்கள்!’ - தவிக்கும் தமிழக விவசாயிகள்கொரோனா டெஸ்ட்
இது தொடர்பாக, கேரள மாநில வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும்போது, ``கம்பம் மெட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவேதான், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.
http://dlvr.it/Ry6wNs
Wednesday, 21 April 2021
Home »
» தேனி: கம்பம் வழியாக கேரளா செல்ல `கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம்! - ஏலக்காய் விவசாயிகள் வேதனை