சோலார் பேனல் மோசடி வழக்கு மூலம் பிரபலமானவர் கேரளத்தின் சரிதா நாயார். கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் உம்மன் சாண்டியுடன் சரிதா நாயர் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகச் சர்ச்சைகள் எழுந்தன. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் சோலார் பேனல் மோசடியில் ஈடுபட்டதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகிவந்தன. அந்த மோசடிகள் குறித்த வழக்குகள் கேரளம், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கோர்ட்டுகளில் நடைபெற்றுவருகின்றன. அதில், ஆலப்புழா, பத்தணம்திட்டா, கோழிக்கோடு கோர்ட்டுகளில் சரிதா நாயருக்கு எதிராக நடைபெற்றுவரும் சோலார் மோசடி வழக்குகளில் வாரன்ட்கள் நிலுவையில் உள்ளன. சோலார் பேனல் அமைத்துக்கொடுப்பதாகக் கூறி, கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவரிடமிருந்து 42 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சரிதா நாயர் மீது புகார் எழுந்தது.பிஜூ ராதாகிருஷ்ணன்
இது குறித்து அப்துல் மஜீத் கோழிக்கோடு கசபா காவல் நிலையத்தில் 2012-ம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் தனது வீடு, அலுவலகம் ஆகிய இடங்களில் சோலார் பேனல் பொருத்துவதாக பிஜூ ராதாகிருஷ்ணன், சரிதா நாயர் ஆகியோர் தங்கள் பெயரை ஆர்.பி நாயர் மற்று லெட்சுமி நாயர் என மாற்றிக் கூறி, இந்த மோசடியில் ஈடுபட்டதாகப் புகாரில் கூறப்பட்டிருந்தது.
அந்த வழக்கு கோழிக்கோடு ஜுடிஷியல் ஃபர்ஸ்ட் கிளாஸ் மாஜிஸ்ட்ரேட் கோர்டில் நடந்துவருகிறது. அந்த வழக்கில் பலமுறை நேரில் ஆஜராகக் கூறியும் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பிஜூ ராதாகிருஷ்ணனும், இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட சரிதா நாயரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கீமோ தெரபி சிகிச்சை காரணமாக சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என அவரது வழக்கறிஞர் கோர்ட்டில் தெரிவித்தார். பிஜூ ராதாகிருஷ்ணனுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்து ஓய்வில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சரிதா நாயர் கீமோ தெரபி எடுப்பதற்கான தெளிவான ஆவணங்கள் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்சரிதா நாயர்
இதையடுத்து சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த ஜாமீனை, கோர்ட் கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்தது. சரிதா நாயரும் பிஜூ ராதாகிருஷ்ணனும் தாமாக முன்வந்து கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், அப்படி ஆஜராகாமல் இருந்தால் கைதுசெய்து ஆஜராக்க வேண்டும் எனவும் கோர்ட் தீர்ப்பளித்தது. மூன்று முறை பிடி ஆணை பிறப்பித்தும், சரிதா நாயர் கோர்ட்டில் ஆஜராகாததால் கடந்த மாதமே முடிந்திருக்க வேண்டிய வழக்கு முடியாமல் காலதாமதமானது.
இந்தநிலையில், கோர்ட் உத்தரவுப்படி கோழிக்கோடு போலீஸார் இன்று திருவனந்தபுரத்துக்கு வந்து சரிதா நாயரைக் கைதுசெய்தனர். இன்றே அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோலார் பேனல் மோசடி வழக்கில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரிதா நாயர் கைதுசெய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/RyFFY0
Friday, 23 April 2021
Home »
» கேரளா: சரிதா நாயர் திடீர் கைது! - சோலார் பேனல் மோசடி வழக்கில் கோர்ட் அதிரடி