முதல்வர் பழனிசாமி பதவிபெற்றது குறித்து அவதூறாக விமர்சித்த திமுக எம்.பி. ஆ.ராசா பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்ததை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள நட்சத்திர பேச்சாளரும், திமுக எம்பி-யுமான ஆ.ராசா சில தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமி பதவிபெற்றது மற்றும் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆ.ராசாவின் பேச்சிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இரண்டு நாட்கள் கழித்து தனது பேச்சு குறித்து மன்னிப்பு கோரியிருந்தார். ஆ.ராசாவின் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக அளித்த புகாரில், 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதை அடுத்து, ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பி, வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகு விளக்கம் அளிக்க கோரிக்கை வைத்திருந்தார். ராசாவின் விளக்கத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஆ.ராசா 48 மணிநேரத்திற்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என இன்று தடை விதித்து உத்தரவிட்டது. அதேசமயம், திமுக-வின் நட்சத்திர பேச்சாளர் பட்டியலிலிருந்து ஆ.ராசாவை நீக்கியும் உத்தரவிட்டிருந்தது.
http://dlvr.it/Rwr1SH
Friday, 2 April 2021
Home »
» பரப்புரை தடைக்கு எதிரான ஆ.ராசாவின் மனுவை அவசர வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு!