மும்பையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருக்கின்றன. இந்தத் தெரு நாய்களுக்கு பொதுமக்கள் அடிக்கடி சாப்பாடு போடுவது வழக்கம். அப்படிச் சாப்பிடும் தெருநாய்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தையே சுற்றிச் சுற்றி வருவது வழக்கம். சிலர் தினமும் தெரு நாய்களுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள். அப்படிப்பட்டவரைக் கண்டால் உடனே தெரு நாய்கள் ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும். அப்படிப் பாசத்துடன் சுற்றிவரும் நாய்களைச் சிலர் தங்களது காம இச்சைக்குப் பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்களும் நடந்துவருகின்றன. கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் மும்பை அந்தேரி டி.என்.நகர் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் அகமத்சஹி (65), அந்தப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு நாய்களுக்கு அடிக்கடி சாப்பாடு போடுவார். நாய்களிடம் பிஸ்கட் போன்ற உணவுப்பொருள்களைக் காட்டி ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று சாப்பாடு கொடுப்ப்பார். அப்படிச் சாப்பாடு கொடுக்கும்போது அகமத் சில நாய்களை வன்கொடுமை செய்துவந்தார். வளர்ப்பு நாய்
அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அகமத்தின் செயலை வீடியோ எடுத்து அதை அந்தப் பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் விஜய் என்பவருக்கு அனுப்பிவைத்தார். விஜய் அந்த வீடியோவுடன் சென்று போலீஸில் புகார் செய்தார். வீடியோவைப் பார்த்த போலீஸார் உடனே அகமத்தை அழைத்து விசாரித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து அகமத்தைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரித்தபோது 30-க்கும் அதிகமான தெரு நாய்களை இது போன்று பாலியல் இச்சைக்கு ஆளாக்கியிருப்பது தெரியவந்தது.
கடந்த மாதம் 19-ம் தேதி சாந்தாகுரூஸ் கலீனாவில் தெருவில் பிரட் விற்பனை செய்யும் தவுபீக் அகமத் (20) என்ற வாலிபர் தெரு நாயைப் பாலியல் வன்கொடுமை செய்தது, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. போலீஸார் அவரைக் கைதுசெய்யும் முன்பு சொந்த ஊருக்குத் தப்பிச் சென்றுவிட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பவாயில் 8 வயது பெண் நாய் வன்கொடுமை செய்யப்பட்டு தெருவில் உயிருக்குப் போராடியபடி கிடந்தது. அதைச் சிகிச்சைக்காக எடுத்து சென்றபோது அதன் பிறப்புறுப்பில் மரக்கட்டையை சில விஷமிகள் சொருகி இருந்தனர். இது தொடர்பாக வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு நவிமும்பை நெரூல் பகுதியில் தெரு நாயைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 65 வயது நபர் கைதுசெய்யப்பட்டார். இவை ஒரு சில சம்பவங்கள்தான். மனிதர்கள் மிக மோசமாக நடந்துகொள்கின்றனர். போலீஸாரின் கவனத்துக்கு வராமல் எத்தனையோ சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என கவலைகொள்கிறார்கள் விலங்கு நல ஆர்வலர்கள். நாய்கள் உணவு
அதுவும் கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு வீட்டு விலங்குகள், குறிப்பாக நாய்களுக்கு எதிரான கொடுமைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது குறித்து மும்பை விலங்குகள் நல ஆர்வலர் விஜய் கூறுகையில், ''கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை பறிபோய்விட்ட வெறுப்பு, செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இப்போது அதிகரித்திருக்கின்றன” என்றார்.
மும்பையில் நடப்பு ஆண்டில் முதல் இரண்டு மாதத்தில் தினமும் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதத்தில் 480 சம்பவங்கள் இது போன்று நடந்திருக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் 886 விலங்குகள் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன. இவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகுதான் அதிக அளவில் நடந்திருக்கின்றன. இதில் 266 சம்பவங்கள் மட்டுமே விபத்து சம்பவங்கள். மற்ற அனைத்தும் விலங்குகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் கொடுமை, அடித்து சித்ரவதை செய்தல், பட்டினி போடுதல் போன்ற சம்பவங்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பாதுகாப்பற்ற விலங்குகளை அடிப்பது, எட்டி உதைப்பது சுடுதண்ணீரை ஊற்றுவது, நாய் வாலை வெட்டுவது, கத்தியால் தாக்குவது போன்ற காரியங்களை சிலர் விளையாட்டாகச் செய்கின்றனர்" என்றார்.
பி.எஃப்.ஏ என்ற விலங்குகள் நல அமைப்பை நடத்திவரும் லதா பார்மர் இது குறித்து கூறுகையில், விலங்குகள் மீதான அக்கறையின்மை, சட்டத்தைக் கண்டுகொள்ளாமைதான் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு முக்கியக் காரணம். பலருக்குச் சட்டம் தெரியாமல் இருக்கிறது. மற்றவர்கள் விலங்குகளைக் காயப்படுத்தினால் தண்டனை கிடைப்பது அபூர்வம் என்ற அச்சமின்மை போன்றவையும் விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு காரணம். மும்பையில் விலங்குகளுக்குச் சிகிச்சையளிக்க ஒரு மருத்துவமனை மட்டுமே இருக்கிறது. அதிலும் இலவசமாக சிகிச்சையளிக்கப்படுவதில்லை. விபத்து அல்லது கொடுமைக்கு ஆளாகும் விலங்குகளை மருத்துவமனைக்குக் கொண்டு செல்பவர்தான் அதற்கான செலவுகளை ஏற்க வேண்டியிருக்கிறது" என்றார்.நாய் கண்காட்சியில் பங்குபெற்ற நாட்டு நாய்கள்
கடந்த 10 ஆண்டுகளில் மும்பையில் விலங்குகளுக்கு எதிரான 20,000 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிலர் மட்டுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விலங்குகளுக்கு எதிரான அனைத்துவிதமான கொடுமைகளுக்கும் தண்டனை உண்டு. ஆனால் அபராதம்தான் மிகவும் சொற்பமாக இருக்கிறது. 10 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை மட்டுமே அபராதம் வசூலிக்கப்படுகிறது. போலீஸாரும் விலங்குகளுக்கு எதிரான குற்றங்களைச் சரியாக விசாரிப்பதில்லை. போலீஸார் இது போன்ற சம்பங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதுமில்லை. மேலும், விலங்குகளைக் கொடுமைப்படுத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களை எந்தவித வாரண்ட்டும் இல்லாமல் கைதுசெய்யவும் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் சட்டம் சரியாக அமல்படுத்தப்படாமல் இருப்பதால் விலங்குகள் தினமும் சித்ரவதைக்கு ஆளாகின்றன.
http://dlvr.it/RxN2kL
Saturday, 10 April 2021
Home »
» மும்பை: பொது முடக்கத்துக்குப் பிறகு நாய்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரிப்பு! - அதிர்ச்சி தகவல்கள்