உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களுக்கு, முதல் மற்றும் இரண்டாம் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளில், கோவாக்சின் மற்றும் கோவிஷேல்டு ஆகிய இரண்டும் கலந்து போடப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. ஊடங்களில் இந்த விஷயம் தெரிய வரும்வரை, சுகாதாரத் துறை அதிகாரிகள் யாரும் அந்த கிராம மக்களை அணுகவில்லை என்ற தகவலும் வெளிவந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.கொரோனா தடுப்பூசி
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களில் உள்ள மக்களுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. பின் மே 14-ம் தேதி போடப்பட்ட இரண்டாம் தவணையில் கோவாக்ஸின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உபி தலைநகர் லக்னோவில் இருந்து 270 கிலோமீட்டர் மட்டுமே தள்ளி இருக்கும் ஊரக மாவட்டமான சித்தார்த் நகரில் நடந்துள்ள இந்தக் குளறுபடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றாலும், உலக அளவில் இரண்டு வகையான தடுப்பூசிகளை காக்டெயிலாகச் செலுத்திக்கொள்வதால் நேரும் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சி முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நடந்த இந்த சம்பவம் குறித்து சித்தார்த்நகர் தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சௌதிரி கூறுகையில், `நிச்சயமாக இது மிகப் பெரிய தவறு' என்றிருக்கிறார்.
மேலும் அவர், `இதுகுறித்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம். குற்றவாளிகள் யாராகினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் அதிகாரிகள் இரண்டாவது டோஸ் மாற்றிப் போடப்பட்டுள்ள மக்களை சந்தித்துள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாகவே உள்ளனர். மேற்கொண்டு அவர்கள் அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே உள்ளனர்' என்றார்.
கிராமத்தைச் சேர்ந்த மக்கள், `இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடச் சென்றபோது, முதல் டோஸ் பற்றி யாரும் கேட்கவில்லை. மருத்துவர் ஒருவர், `உங்களுக்குத் தடுப்பூசி மாற்றிப் போடப்பட்டுள்ளது' என்று கூறியபின்தான், தவறு நடந்தது எங்களுக்குத் தெரிந்தது. அதன் பின்னும் யாரும் எங்களை பரிசோதிக்கவில்லை, கண்காணிக்கவில்லை. நாங்கள் மிகவும் பயத்தில் உள்ளோம்' என்று தெரிவித்துள்ளனர். Vaccine
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போடும் வேகம் மிகக் குறைவாக உள்ளது. மொத்த மக்கள்தொகையில் 1.4% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S0THv7
Thursday, 27 May 2021
Home »
» 20 கிராம மக்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு; இரண்டாவது கோவாக்சின்! - உத்தரப்பிரதேச அவலம்