இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல் போன்ற பக்கவிளைவுகள் அரிதினும் அரிதாகவே மிகக் குறைந்த அளவில்தான் ஏற்படுகிறது என்று நோய்த் தடுப்புக்குப் பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக்குழு (AEFI) தெரிவித்துள்ளது. இந்தியாவில் 753 மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வில் 0.61 சதவிகிதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, 10 லட்சம் பேரில் 6100 பேர் மட்டுமே என்கிறது அந்தக் குழு. உலக அளவில் பயன்படுத்தப்படும் அஸ்டாசென்கா - ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு அதற்குப் பிறகு பயனாளர்களுக்கு ரத்தக்கசிவு, ரத்தம் உறைதல் போன்றவை ஏற்படுவதாக சில நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே இந்த தடுப்பூசிகளை பயன்படுத்துவதில் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் சில நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதனையடுத்து, இந்தியாவில் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டது. இதற்கான பணியினை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கு பிந்தைய பக்கவிளைவுகளுக்கான தேசிய ஆய்வுக் குழு, நாட்டில் உள்ள 753 மாவட்டங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில், 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கே இந்த ரத்தம் உறைதல், ரத்த கசிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த பாதிப்பு என்பது பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் பதிவான எண்ணிக்கையை விட மிக மிகக் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கோவாக்சின் தடுப்பூசியால் ரத்தம் உறைதல், ரத்தக் கசிவு உள்ளிட்ட பிரச்சனைகள் பதிவாகவில்லை எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
http://dlvr.it/RzsP7z
Tuesday, 18 May 2021
Home »
» இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் அரிதினும் அரிதாகவே பக்க விளைவுகள்: AEFI ஆய்வு