ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் நோயாளிகளை இலவசமாக அழைத்துசெல்ல, மனைவியின் நகைகளை விற்று தனது ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றியிருக்கிறார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஜாவத் கான். மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஜாவத் கான், தனது ஆட்டோவை ஆம்புலன்சாக மாற்றி நோயாளிகளை இலவசமாக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்கிறார். இதற்காக தனது மனைவியின் நகைகளை விற்றதாக ஜாவேத் கூறினார், இதுவரை ஜாவத் ஒன்பதுக்கும் மேற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுபற்றி கூறும் ஜாவத், "ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் மருத்துவமனைகளுக்கு செல்ல மக்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பதை நான் சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் பார்த்தேன். அதனால்தான் இந்த செயலை செய்ய நினைத்தேன், இதற்காக எனது மனைவியின் நகைகளை விற்றேன். எனது ஆட்டோ ஆம்புலன்ஸ் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளது, என் தொடர்பு எண் சமூக ஊடகங்களில் கிடைக்கிறது. ஆம்புலன்ஸ் இல்லாவிட்டால் மக்கள் என்னை அழைக்கலாம்” என தெரிவித்தார்
http://dlvr.it/Ryp7rb
Saturday, 1 May 2021
Home »
» ம.பி: மனைவியின் நகைகளை விற்று ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய ஓட்டுநர்