தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிக முக்கியப் பங்காற்றிவருகிறது சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை. இந்த மருத்துவமனை அதிமுகவைச் சேர்ந்த ஜெ ஜெயலலிதா மற்றும் திமுகவைச் சேர்ந்த மு.கருணாநிதி ஆகியோரின் ஒன்றுபட்ட முயற்சியால் ஓமந்தூரார் மருத்துவமனை உருவானது. மு. கருணாநிதி புதிய தலைமை செயலமாக உருவாக்கிய கட்டடத்தை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெ.ஜெயலலிதா மருத்துவமனையாக மாற்றியமைத்தார். காரணம் புதிய தலைமை செயலகத்தை ஜெயலலிதா ராணி மேரி கல்லூரிக்கு அருகில் வங்காள விரிகுடா கடலையொட்டி அமைக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டபோது அதற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. எனவே அவர் அண்ணா பல்கலைக்கழகத்திடமிருந்து தலைமை செயலகம் அமைக்க கோட்டூர்புரத்தில் ஓர் இடத்தை வாங்கினார். ஆனால் 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபோது அந்த நிலத்தை திரும்ப ஒப்படைத்தது. அதன்பிறகு கருணாநிதி முதலமைச்சரானபோது ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் புதிய தலைமை செயலகத்தை கட்டியெழுப்பி, சட்டசபையை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து அங்கு மாற்றியது. ஆனால் 2011இல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது சட்டசபையை மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றினார். அதன்பிறகு ஓமந்தூரார் கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றினார். இருபெரும் தலைவர்களும் மறைந்தபிறகு தற்போது கடுமையான கொரோனா காலகட்டத்தில் மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். நகரின் முக்கியப் பகுதியில் 550 கொரோனா படுக்கைவசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனையை மேலும் மேம்படுத்துவதற்கு அவருக்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. தற்போதைக்கு ஓமந்தூரார் மருத்துவனையை தலைமை செயலகமாக மாற்றுவது குறித்து எந்தவொரு ஆலோசனையும் நடைபெறவில்லை என்று திமுகவிடமிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. மருத்துவ வல்லுநர்களும், அதிகாரிகளும் அங்கு மருத்துவமனை இருப்பதே சிறந்தது எனவும், இதுபோன்ற நோய்காலங்களை கருத்தில்கொண்டு மருத்துவமனையை விரிவுபடுத்தலாம் என்றும் கூறுகின்றனர். மேலும் கடந்த ஆட்சியில் இந்த கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற ரூ. 100 கோடி செலவிடப்பட்டது எனவும், தற்போது அதை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றினால் நமது அரசாங்கத்திற்கு பெரிய இழப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர். மேலும் ஓமந்தூரார் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது. இதில் சிகிச்சைக்கான பல உயரிய உபகரணங்கள் உள்ளன. இங்கு ஏழைகள் மட்டுமல்ல; அனைத்து தரப்பினரும் சிகிச்சைக்காக வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர் ரவீந்தர்நாத் கூறுகையில், ’’இந்த கட்டடம் மருத்துவமனையாகக் கட்டப்படாவிட்டாலும், தற்போது சிறந்த மருத்துவமனையாக உள்ளது. பொதுமக்களின் பணத்தை வீணடிப்பதைத் தவிர்க்க மருத்துவமனையாகவே இயக்குவதே சிறந்தது’’ என்கிறார். இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜே.ஏ ஜெயலால் கூறுகையில், ‘’இந்த மருத்துவமனைஅனைத்து வசதிகளுடன் மேலும் விரிவுப்படுத்தப்பட வேண்டும். மேலும் நோய்க்கிருமிகள் குறித்த ஆராய்ச்சிக்கான வழிவகைகளும் உருவாக்கப்பட வேண்டும்’’ என்கிறார். Courtesy: டைம்ஸ் ஆஃப் இந்தியா
http://dlvr.it/RzPkYN
Monday, 10 May 2021
Home »
» கொரோனா பாதிப்புக்கு சிறப்பான சிகிச்சையளிக்கும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் வரலாறு!