உலக குடும்பத் தினத்தையொட்டி 'காபி ஆர்ட்' மூலம் பெண்மையின் சிறப்பை விளக்கும் வகையில் ஓவியம் வரைந்து வரும் மாணவிக்கு பாராட்டுகள் குவிகிறது. மதுரை மேல அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கீர்த்திகா. இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேஷன் டெக்னாலஜி துறையில் இறுதியாண்டு பயின்று வருகிறார். இவருடைய தந்தை கண்ணன் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இச்சூழலில், இன்று உலக குடும்ப தினைத்தையொட்டி குடும்பத்தின் ஆதாரமாக ஆணிவேராக விளங்கக்கூடிய பெண்ணின் சிறப்பை விளக்கும் வகையில் காபித்தூளை மட்டும் பயன்படுத்தி கீர்த்திகா ஒவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஒரு குடும்பத்தில் முக்கியமான நபராக தாய் உள்ளதால் அன்றாடம் அவர் செய்யும் பணிகள், ஒரு பெண் இறப்பு முதல் பிறப்பு வரை எப்படி வளர்கிறார், அவர் செய்யும் பணிகள் குறித்து பிரம்மாண்ட ஓவியத்தை வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 160 சதுர அடி வெள்ளை பிளக்ஸில் காலை 8 மணி முதல் வரைய தொடங்கியுள்ளார். முழுவதுமாக இந்த ஓவியத்தை வரைய 12 மணி நேரமாகும் என மாணவி கீர்த்திகா தெரிவிக்கிறார். வண்ண வண்ண நிறங்களில் பலர் ஒவியம் வரைந்து சாதனை படைக்கும் நிலையில், உலக குடும்ப தினத்தில் பெண்மையின் பெருமையை எடுத்து சொல்லும் வகையில் இவர் வரையும் ஒவியம் பலரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஓய்வில்லாமல் தொடர்ச்சியாக தனிநபராக ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். காபி ஆர்ட் குறித்து கொஞ்சமாகவே தெரிந்திருந்தாலும், கடந்த கொரானா முதல் அலையின் போது வீட்டில் வேலையில்லாமல் இருந்த போது தொடர்ந்து வரைய கற்றுக்கொண்டதாக தெரிவித்தார். குடும்பத்தில் முக்கியமானவர் தாய் என்பதாலும், அப்பாவுக்கு மேலே நான் தாயை பார்ப்பதால் இந்த உலக குடும்ப தினத்தில் ஓவியம் வரைவதாகவும், ஒரு பெண் பிறப்பதில் இருந்து கல்யாணம் செய்வது, குழந்தைகளை பெறுவது, குடும்பத்தை வழிநடத்துவது என 11 வித ஓவியங்களை வரைவதாகவும் மாணவி கீர்த்திகா தெரிவித்தார். உலக குடும்ப தினத்தில் பெண்ணின் பெருமையை விளக்கும் வகையில் மாணவி கீர்த்திகா வரைந்த ஓவியம் அனைவரின் பாராட்டுதலையும் பெற்றுள்ளது.
http://dlvr.it/RzmM1H
Sunday, 16 May 2021
Home »
» காபி ஆர்ட் மூலம் பெண்மையின் சிறப்பை விளக்கும் ஓவியம் - மதுரை மாணவிக்கு குவியும் பாராட்டு!