கொரோனாவைக் கட்டுப்படுத்த இந்தியா சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என உலகின் பிரபல பத்திரிகைகள் பலவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. எதிர்க்கட்சிகளும் மத்திய அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. இந்த விமர்சனங்கள் குறித்து மஹிந்த்ரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ``ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் புதிதாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. அங்கு படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மும்பை மாடலைப் பின்பற்ற வேண்டும்.ஆனந்த் மஹிந்த்ரா
உலகில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதில் மக்கள் இந்தியாவை விமர்சனம் செய்வதை நிறுத்த வேண்டும். இவ்வாறு விமர்சனம் செய்வதால் கொரோனாவுக்கு எதிரான போரில் எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த மார்ச் மாத இறுதியில் ஆனந்த் மஹிந்த்ரா வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ``மகாராஷ்டிரா அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதை விட்டுவிட்டு மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றும், ``பொதுமுடக்கத்தால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிறுதொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்படும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இப்படி ஆனந்த் மஹிந்த்ரா தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கு சிலர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கொரோனா விவகாரத்தில் அரசை விமர்சிப்பது இந்தியாவை விமர்சிப்பதாக அமையாது என்றும் தெரிவித்துள்ளனர்.
சுவேதா சர்மா என்பவர் ஆனந்த் மஹிந்த்ராவின் ட்விட்டர் பதிவுக்கு அளித்துள்ள பதிலில், ``சார், நீங்கள் இந்தியாவுடன் அரசை ஒப்பிடுகிறீர்கள். இந்தியா தற்போதுள்ள அரசாங்கத்துக்கு சமமானது கிடையாது. அரசு கொரோனா பரவலை சரியாகக் கையாளவில்லை என்றுதான் விமர்சிக்கிறோம். இந்தியாவை விமர்சிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.COVID-19
வேறு சிலர் ஆனந்த் மஹிந்த்ராவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளைத் தெரிவிப்பதை விட்டுவிட்டு அரசை மட்டும் சிலர் விமர்சிக்கின்றனர் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா முதல் அலையின் போது பாடம் கற்றுக்கொண்டு, அதற்கேற்ப மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது. அத்துடன் படுக்கை ஒதுக்கீட்டையும் ஒழுங்குபடுத்தியது. ஏப்ரல் தொடக்கத்தில் மும்பையில் கொரோனா தொற்று 11,000-க்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது 1,100-க்கும் குறைவாகவே பதிவாகிவருகிறது.
http://dlvr.it/S0THpG
Thursday, 27 May 2021
Home »
» `கொரோனா பிரச்னையில் இந்தியாவை விமர்சிப்பதை நிறுத்துங்கள்!' - ஆனந்த் மஹிந்த்ரா காட்டம்