மகாராஷ்டிராவில் இம்மாத தொடக்கத்தில் தினமும் 60 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா தொற்று இருந்தது. ஆனால் இப்போது 25 ஆயிரத்திற்கும் கீழே வந்துள்ளது. மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு முன் மாதிரியாக இருக்கிறது. மிகவும் மக்கள் தொகை மிகுந்த மும்பை நகரில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை உச்ச நீதிமன்றமே பாராட்டியிருந்தது. தற்போது மும்பை உயர் நீதிமன்றமும் மும்பை மாநகராட்சியை பாராட்டி இருக்கிறது. மும்பை
இது தொடர்பான வழக்கு ஒன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ``கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மும்பை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் மிகவும் சிறப்பானவை. மும்பை மாடலை மாநிலத்தில் உள்ள நாசிக் மற்றும் புனே நகரங்களில் ஏன் அமல்படுத்தவில்லை” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
``மகாராஷ்டிராவில் உள்ள மற்ற மாநகராட்சி கமிஷனர்களுடன் மும்பை மாநகராட்சி கமிஷனர் ஏன் வீடியோ கான்பெரன்ஸ் மூலம் மும்பை மாடலை பகிர்ந்து கொள்ளவில்லை?” என்று மாநில அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். `மும்பையில் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்ட திட்டத்தை மகாராஷ்டிராவின் மற்ற மாநகராட்சிகளிலும் அமல்படுத்தவேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும்’ என்று தெரிவித்தனர்.
Also Read: மும்பை: பொதுமுடக்கத்தால் வருமானம் இல்லை... 5 மாதக் குழந்தையை விற்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர்!
இதற்கிடையே மகாராஷ்டிராவில் ஒரு வாரத்திற்கு பிறகு, கொரோனா பாதிப்பால் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்தது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் தினத்தொற்று 24,752 ஆக இருந்தது. ஆனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,065. மும்பையில் 1,352 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டனர். குடிசைகள் அதிகமுள்ள தாராவியில் தினத்தொற்று 24 மணி நேரத்தில் 3 ஆக இருந்தது. கொரோனா
இதற்கிடையே மும்பை உயர் நீதிமன்றத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அடார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுப்பது குறித்து பதிலளிக்கும் படி மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அடார் பூனாவாலாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக கூறி மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுத்திருக்கிறது. ஆனால் இது போதாது என்றும் இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி வழக்கறிஞர் தத்தா மானே மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஷிண்டே, போர்கே ஆகியோர், அதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுப்பது குறித்து பதிலளிக்கும் படி மாநில அரசை கேட்டுக்கொண்டது. நாட்டில் தற்போது இரண்டு நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S0YCMp
Friday, 28 May 2021
Home »
» கொரோனா: `மும்பை மாடலை மற்ற மாநகராட்சிகள் ஏன் பின்பற்றவில்லை?!’ - மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்