கேரள மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது சி.பி.எம் தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணி. பினராயி விஜயன் 2.0 அமைச்சரவையில் அனைவரும் புதுமுகங்களாகவே இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கட்சி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்கெனவே இருந்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் உள்ளிட்ட ஐந்துபேருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தலில் போட்டியிட்ட மீன்வளத்துறை அமைச்சர் மேழ்சிக்குட்டி அம்மா தோல்வியைத் தழுவினர். இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் யார் யார் இடம்பெற வேண்டும் என்பது குறித்த சி.பி.எம் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் கூட்டணி கட்சியில் யாருக்கு எவ்வளவு சீட் வழங்க வேண்டும் என்பது குறித்தும், சி.பி.எம் கட்சியில் யார் யாருக்கு சீட் வழங்க வேண்டும் என்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.பினராயி விஜயன்
அதன்படி பழைய அமைச்சர்களுக்கு கல்தா கொடுத்துவிட்டு புது முகங்களை அமைச்சராக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்கும் சமயத்தில் குறைந்த அளவு அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றக உள்ளதாகவும், அதன்பிறகு அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் சி.பி.எம் மாநில செயற்குழு உறுப்பினர்களான பி.ராஜூ, பால கோபாலன் ஆகியோர் கண்டிப்பாக இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் ஒருவருக்கு நிதி அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி.ராஜேஷ், வீணா ஜார்ஜ் அகியோருக்கு கல்வித்துறை வழங்கப்பட உள்ளதாகவும். கடகம்பள்ளி சுரேந்திரன் வகித்த தேவசம்போர்டு அமைச்சர் பதவி சிவன் குட்டிக்கு வழங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.கே.கே.சைலஜா
அமைச்சரவையின் அனைவரும் புதுமுகமாக இருந்தாலும், ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.கே.சைலஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மழை வெள்ள பிரளயத்தின்போதும், நிஃபா வைரஸ், கொரோனா வைரஸ் பரவல்களின்போதும் திறம்பட செயல்பட்டு பினராயி விஜயன் அரசுக்கு உலக அரங்கில் நல்ல பெயரை ஈட்டித்தந்தவர் கே.கே.சைலஜா. எனவே மீண்டும் அவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனுடன் கூடுதலாக சில துறைகள் கே.கே.சைலஜாவுக்கு வழங்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
http://dlvr.it/Rz7fMn
Thursday, 6 May 2021
Home »
» கேரளா: மந்திரி சபையில் அனைத்தும் புதுமுகங்கள் - சைலாஜா டீச்சருக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு?