மும்பை கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள விக்ரோலியில் வசித்து வந்தார் நிஷா தேஷ்முக்(27). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மனித வள மேம்பாட்டுப் பிரிவில் பணியாற்றி வந்தார். திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் குழந்தை இல்லாமல் இருந்தது. இதனால் கணவன் வீட்டில் மாமியார் குழந்தை இல்லாததை சுட்டிக்காட்டி மனரீதியாக சித்ரவதை செய்து வந்திருக்கிறார்.
Also Read: மஹாராஷ்டிரா: மராத்தா சமூகத்துக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!
அவரது கணவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு அடித்து உதைத்து வந்தார். இந்நிலையில் நிஷாவின் மொபைல் போனை அவரது கணவன் சோதனை செய்து பார்த்துள்ளார். அதில் நிஷா தனது அலுவலக நண்பர்கள் சிலருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்திருந்த புகைப்படம் இருந்தது. உடனே இது குறித்து நிஷாவிடம் கேட்டு கணவன் தகராறு செய்துள்ளார். அதோடு விடாமல் நிஷாவின் தந்தைக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்திருக்கிறார்.
நிஷாவின் தந்தையிடம் மொபைலில் இருந்த செல்ஃபி படங்கள் குறித்து கேட்டு தகராறு செய்துள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே இரு தரப்பினரும் விக்ரோலி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். போலீஸார் தம்பதி இடையே சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு நிஷாவை இரண்டு நாட்கள் அவளது தந்தையின் வீட்டில் இருந்துவிட்டு வரும்படி கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து நிஷாவை அவளது தந்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அங்கிருந்து மறுநாள் காலையில் நிஷா அலுவலகத்திற்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார். ஆனால் அதன் பிறகு வீட்டுக்கு வரவில்லை. அவரை பெற்றோர் தேட ஆரம்பித்த போது நிஷாவின் தந்தை மற்றும் சகோதரனுக்கு நிஷாவின் தற்கொலைக் குறிப்பு கிடைத்திருக்கிறது. உடனே அவரை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் பலனில்லை.
Also Read: சென்னை: பிரிந்துபோன காதல் கணவர்; ஆண் நண்பரின் சந்தேகம்! - கொலை செய்யப்பட்ட பெண்!நடந்தது என்ன?
இறுதியில் நிஷா விக்ரோலி ரயில் தண்டவாளத்தில் படுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டது தெரிய வந்தது. இது குறித்து நிஷாவின் தந்தை, நிஷாவின் கணவன் மற்றும் மாமியார் வீட்டில் உள்ளவர்கள் மீது போலீசில் புகார் செய்திருக்கிறார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேவையில்லாத சந்தேகம் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்திருக்கிறது.
http://dlvr.it/RzRQLl
Monday, 10 May 2021
Home »
» மும்பை: ஆண் நண்பர்களுடன் செல்ஃபி; கணவன் சந்தேகத்தால் மனைவி ரயில் முன்பாய்ந்து தற்கொலை