கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகளுக்கான கள்ளச்சந்தை ஆபத்து, ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதைத்தொடர்ந்து, இந்திய அரசு சார்பில் கள்ளச்சந்தையில் மருந்து விற்பனையை தடுக்கும்விதமாக மாநிலங்கள் அனைத்தும் குழுவை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஊழலுக்கு எதிரான, இந்தியாவுக்கான சர்வதேச வெளிப்படைத்தன்மைக்கான அமைப்பு (Transparency International India - டி.ஐ.ஐ.) எழுப்பியுள்ளது. இந்தக் கள்ளச்சந்தை ஆபத்தை, கொரோனாவுக்கு அடுத்தபடியான பெருந்தொற்று (எ) இரண்டாவது பெருந்தொற்று என டி.ஐ.ஐ கூறுகிறது. இந்த கொரோனா இரண்டாவது அலையில், இந்தியாவில் இப்போதைக்கு ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு, ஆம்புலன்ஸ், படுக்கை வசதிகள், வெண்டிலேட்டர் வசதிகள் என அனைத்துமே நாடு முழுவதும் பல இடங்களில் தட்டுப்பாடான நிலையில்தான் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தட்டுப்பாடு அதிகரிக்க அதிகரிக்க, அதற்கான கள்ளச்சந்தையும் அதிகரித்துக் கொண்டே போவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கள்ளச்சந்தை அதிகரிப்பதால், கோவிட் 19 சிகிச்சைக்கான மருத்துவ தேவைகள் அதிகமாவதாகவும், இதனால் அரசாங்கத்தோடும் தன்னார்வ அமைப்புகள் மற்றும் அறக்கட்டளைகளோடும் இணைந்து முழு வீச்சில் பயணிப்பது சிரமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டி.ஐ.ஐ. இயக்குநர் ராம நாத் ஜா பேசுகையில், "கொரோனா பேரிடரில் நிகழும் சிகிச்சைக்கு தேவையான பொருள்கள் விநியோகம் மற்றும் தட்டுப்பாட்டுக்கு இடையிலான இடைவெளியை குறைக்க, அரசாங்கம் கள்ளச்சந்தையில் ஈடுபடும் நபர்களின் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, நாடு முழுவதும் செயல்பாட்டிலிருக்கும் கள்ளச்சந்தைகள் பற்றிய விவரங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வரவேண்டும். அரசு அதை நோக்கி செயல்பட வேண்டும்" எனக்கூறியுள்ளார். இதற்காக நாடு முழுவதும் தொலைப்பேசி வழியாகவோ இணையம் வழியாகவோ கள்ளச்சந்தை தொடர்பான புகார்களை பொதுமக்களும் அமைக்க ஏற்பாடு செய்யுமாறு ஆலோசனை கூறியுள்ளார்கள் அவர்கள்.
http://dlvr.it/RzCmVH
Friday, 7 May 2021
Home »
» 'கள்ளச்சந்தையை தடுக்க நடவடிக்கை எடுங்கள்' - இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்த டி.ஐ.ஐ. அமைப்பு