20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டசபையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார்கள் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள். தமிழ்நாட்டில் நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெற்றதை அடுத்து `தமிழகத்தில் தாமரை மலர்ந்துவிட்டது' என பா.ஜ.க-வினர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் அடங்குவதற்குள்ளாகவே பா.ஜ.க-வின் கோட்டைகளான வாரணாசி, அயோத்தியா ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது அந்தக் கட்சி.பாஜக
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை நான்கு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றன. அந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் நேற்று (மே 4) நடைபெற்றன. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 3,050 பஞ்சாயத்து வார்டுகள் இருக்கின்றன. அந்த வார்டுகளில், 790 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி. பா.ஜ.க 719 இடங்களையும், பகுஜன் சமாஜ் 381 இடங்களையும் கைப்பற்றியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சி 76 இடங்களிலும், சிறிய கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மற்றவர்கள் 1,114 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றனர்.
Also Read: அ.தி.மு.க-வின் தோல்விக்கு பா.ஜ.க உடனான கூட்டணிதான் காரணமா?
குறிப்பாகப் பிரதமர் மோடி வெற்றி பெற்ற நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி பகுதிக்கு உட்பட்ட 40 பஞ்சாயத்து வார்டுகளில் எட்டு வார்டுகளில் மட்டுமே பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கிறது. வாரணாசியில் சமாஜ்வாதி கட்சி 14 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 5 இடங்களிலும் வெற்றிபெற்றிருக்கின்றன.உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்
அயோத்தி பகுதிக்கு உட்பட்ட 40 வார்டுகளில் 24 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது சமாஜ்வாதி. அங்கு பா.ஜ.க 6 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் 5 வார்டுகளிலும் வெற்றிபெற்றிருக்கின்றன. உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள 25 வார்டுகளில் பா.ஜ.க வெறும் 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி கண்டிருக்கிறது. அதே நேரத்தில் 10 வார்டுகளை கைப்பற்றியிருக்கிறது சமாஜ்வாதி.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊரான கோரக்பூரிலுள்ள 68 வார்டுகளில் 20 வார்டுகளை பா.ஜ.க வென்றிருக்கிறது. அங்கு 19 வார்டுகளைக் கைப்பற்றி இரண்டாவது இடம் பெற்றிருக்கிறது சமாஜ்வாதி.
உத்தரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க வாரணாசி, அயோத்தி, கோரக்பூர் உள்ளிட்ட இடங்களில் பின்னடைவைச் சந்தித்திருப்பது அந்த கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்திருப்பது அந்தக் கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
``பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை, வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் கண்டு கொள்ளப்படாதது, கொரோனா பரவலை மோசமாக கையாண்டது உள்ளிட்டவற்றின் விளைவாகத்தான் உள்ளாட்சித் தேர்தலில் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது பா.ஜ.க'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.அகிலேஷ் யாதவ்
இது குறித்துப் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ``மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலைப் போல இருக்கிறது பா.ஜ.க. 2022 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தோல்வியைத் தழுவும் என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன'' என்று கூறியிருக்கிறார்.
http://dlvr.it/Rz7fPr
Thursday, 6 May 2021
Home »
» உ.பி உள்ளாட்சித் தேர்தல்: பிரதமர் மோடியின் வாரணாசி, அயோத்தி தொகுதிகளில் பாஜக பின்னடைவு!