கொரோனா தொற்றிலிருந்து விடுபட பிளாஸ்மா தெரபி சிகிச்சை கைமேல் பலன் கொடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் தங்களது பிளாஸ்மாவை தானம் செய்யலாம் என சொல்லப்படுகிறது. அதை பயன்படுத்தி நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளது இந்தியாவின் இ-காமர்ஸ் நிறுவனமான SNAPDEAL. அதன்படி இந்நிறுவனத்தின் பிரத்யேக வலைபக்கத்தில் பிளாஸ்மா தானம் கொடுக்க தயாராக உள்ள கொடையாளர்களும், பிளாஸ்மா தேவை உள்ளவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். அவரவருக்குப் பொருத்தமான பிளாஸ்மா கிடைக்கும் போது இந்நிறுவனம் அலார்ட் செய்யும் என தெரிகிறது. பிளட் குரூப், இருப்பிடம் மாதிரியான விவரங்களை இதில் பதிவு செய்ய வேண்டியுள்ளது. We have started a plasma connect initiative, #Sanjeevani. It enables those in need of #plasma to find eligible #plasmadonorsVisit https://t.co/AKIqZPiiwP & register as a donor or recipient. #Covid19IndiaHelp #COVIDEmergencyIndia https://t.co/twEzRGDaVj pic.twitter.com/XGZiAy53nT — Snapdeal (@snapdeal) May 7, 2021 சுருக்கமாக SNAPDEAL இதில் இருதரப்புக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. யார்? யார்? பிளாஸ்மா தானம் கொடுக்கவும், பெறவும் தகுதியானவர்கள் என்பதை https://www.snapdeal.com/offers/plasmahelp?ref=phm இந்த லிங்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.
http://dlvr.it/RzHlZn
Saturday, 8 May 2021
Home »
» பிளாஸ்மா தானத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் செயல்படும் SNAPDEAL!