கில்லி படத்தில் வில்லன் பிரகாஷ்ராஜிடமிருந்து தப்பிக்க, ஹீரோ விஜய், த்ரிஷாவை யாருக்கும் தெரியாமல் தனது ரூமில் மறைத்து வைத்திருப்பார். உணவு முதல் அனைத்து விஷயங்களையும் த்ரிஷாவுக்கு அந்த ரூமிலேயே கிடைக்க செய்வார் விஜய். இதேபாணியில் கில்லி படத்தை விஞ்சும் வகையில் கேரளாவில் ஓர் சம்பவம் நடந்துள்ளது.காதல்
Also Read: 10 ஆண்டுகள் வீட்டில் தன் அறையில் காதல் மனைவியை ஒளித்துவைத்த ரியல் `கில்லி' ரஹ்மான்!
காதலுக்காக, ஒரு இளைஞர் தனது காதலியை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக யாருக்கும் தெரியாமல் தனது அறையில் வைத்து வாழ்ந்துள்ள அரிதான சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நென்மாரா பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மான் (வயது 34). எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அயிலூர் பகுதியைச் சேர்ந்த சஜிதா என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரின் வீடு அருகருகே இருந்தாலும், வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்க மாட்டார்கள் என்று சந்தேகித்துள்ளனர்.சஜிதா ரஹ்மான்
இதனால், எந்தத் தகவலும் சொல்லாமல் சஜிதா கடந்த 2010-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி, ரஹ்மான் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதுகுறித்து சஜிதாவின் பெற்றோர் அப்போதே புகார் கொடுத்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ரஹ்மான் வீட்டில் இருந்தது சஜிதா பெற்றோருக்கு மட்டுமல்ல.. சஜிதா இருந்த விஷயம் 10 ஆண்டுகளாகியும் ரஹ்மான் பெற்றோருக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாமல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக ரஹ்மான் அறையில் அவர்களின் காதல் தொடர்ந்துள்ளது.ரஹ்மான் அறை
ரஹ்மானின் பெற்றோர் கூலி வேலை செய்பவர்கள். ரஹ்மான் வேலைக்கு செல்லும்போது அவரது அறையை பூட்டி சென்றுவிடுவாராம்.
உணவு சாப்பிடும்போது தனது அறைக்கு சென்றுதான் சாப்பிடுவாராம். அப்போது தனக்கு வைத்திருக்கும் உணவை சஜிதாவுக்கும் பகிர்ந்தளித்துள்ளார். யாருக்கும் சந்தேகம் வராதபடி ஜன்னல் கம்பியை கழட்டி மாற்றும்படி அமைத்துள்ளார். கழிப்பறை மற்றும் மற்ற தேவைகளுக்கு சஜிதா அந்த வழியை பயன்படுத்தி வந்துள்ளார்.ரஹ்மான் வீடு
இத்தனைக்கும் ரஹ்மான் வீடு பங்களா எல்லாம் இல்லை. மூன்றே அறைகளை கொண்ட ஓட்டு வீடுதான். ஆனாலும், தனது அறையில் உள்ள காதலி சஜிதாவை பாதுகாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறார்.
அதன்படி, அவர் மட்டும் திறக்கும்படியான எலக்ட்ரானிக் பூட்டை தனது அறையில் மாட்டியுள்ளார். வேறு யாராவது கதவை தொட்டால் ஷாக் அடிக்கும் வகையில், கதவில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். அவரது அறையில் டி.வி வைத்திருந்தாலும், அது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, தனியாக ஒரு ஹெட்போனும் கொடுத்துள்ளார்.எலக்ட்ரிக் பூட்டு
இந்த விஷயமெல்லாம் தெரியாத ரஹ்மான் பெற்றோர், அவருக்கு நிக்கா செய்ய வரன் பார்த்து வந்துள்ளனர். இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஹ்மான் காதலி சஜிதாவுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்து ரஹ்மான் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தனர்.
இந்நிலையில், ரஹ்மான் சஜிதா தம்பதி நென்மாரா அருகே உள்ள விதன்னசேரி பகுதியில் தனியாக வீடு எடுத்த தங்கியிருந்த விஷயம் காவல்துறைக்கு தெரிந்தது. இதையடுத்து, போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரும் ஒன்றாக வாழ விரும்புவதால், நீதிமன்றம் அவர்கள் காதலுக்கு அனுமதி கொடுத்து அனுப்பிவிட்டது.ரஹ்மான் சஜிதா தங்கியிருந்த அறைரஹ்மான் சஜிதா தங்கியிருந்த அறை
நீதிமன்றம் வரை சென்ற பிறகுதான் இந்த காதல் கதை வெளியில் வந்துள்ளது. தற்போது, இருவரும் மீண்டும் விதன்னசேரி பகுதியில் உள்ள வீட்டில் வாழ தொடங்கியுள்ளனர்.
ஆனால், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த காதலை வைத்து அரசியலும் தொடங்கியுள்ளது. சஜிதாவை ரஹ்மான் மதம் மாற்றிவிட்டார் என்று கிளப்பிவிட, அந்தத் தகவலை ரஹ்மான் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அவர்களுக்கு உதவும் விதமாக பல பகுதிகளில் இருந்து மக்களும், காவல்துறையினரும் அடுப்பு, கட்டில் சமையல் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் போன்றவற்றை தேடி வந்து கொடுக்கின்றனர்.ஜன்னல்
ஆலத்தூர் எம்.பி ரம்யா ஹரிதாஸ் அவர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு பிறகு மகள் சஜிதாவை, அவர்களது வீட்டுக்கே சென்று பெற்றோர் வேலாயுதன், சாந்தா சந்தித்து பேசியுள்ளனர்.
இவர்களின் காதல் தொடர்பாக போலீஸார் இருவரையும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். ஆனால், இரண்டு பேரும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே மாதிரியான பதிலை சொல்ல காவல்துறையே இவர்களின் காதலை கண்டு வியந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் கேட்டதற்கு,எம்.பி ரம்யாவுடன் ரஹ்மான் சஜிதா
"இது மிகவும் கடினம். 10 ஆண்டுகள் எப்படி சமாளித்தோம்? என்று எங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. இனி எங்கள் காதலை சுதந்திரமாக கொண்டாடுவோம்" என்றனர் மகிழ்ச்சியுடன்.
சஜிதா - ரஹ்மான் வீட்டுக்கு 500 மீட்டர்தான் தொலைவு. ரஹ்மான் தங்கையின் தோழிதான் சஜிதா. 500 மீட்டர் தொலைவில் இருந்தும் அவரை கண்டுபிடிக்கவில்லை. பலர் சஜிதா தமிழ்நாட்டுக்கு யாருடனோ சென்றுவிட்டார் என்றெல்லாம் நினைத்துவிட்டனர். இவர்களின் காதலை வெளிக் கொண்டு வந்தது ஊரடங்குதான்.போலீஸ்
கொரோனா ஊரடங்கால் ரஹ்மானுக்கு வேலையில்லை. ஊரடங்குக்கு முன்பு வேலை இருந்ததால் தன்னுடைய உணவில் அவருக்கு பங்களித்துள்ளார். ஆனால், ஊரடங்கால் அவர் சாப்பிடுவதே பிரச்னையாகியுள்ளது. இதனால், ரஹ்மானின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ரஹ்மான் பெற்றோர், 'இவனுக்கு ஏதோ பிடித்து விட்டது என்று வெளியில் இருந்து மந்திரிவாதியை அழைத்து வந்துள்ளனர். அதனால்தான் ரஹ்மான் ஒருகட்டத்தில் சஜிதாவுடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். ஒருநாள் ரஹ்மானை அவரது சகோதரர் பார்க்க அனைத்து விஷயங்களும் வெளிவந்துவிட்டது.
Also Read: 10 ஆண்டுகள் வீட்டில் தன் அறையில் காதல் மனைவியை ஒளித்து வைத்த ரியல் `கில்லி' ரஹ்மான்!
http://dlvr.it/S1Ws1F
Friday, 11 June 2021
Home »
» 10 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஊரடங்கு! - கேரளா வைரல் காதல் தம்பதி விவகாரம் `வெளிவந்தது’ எப்படி?