உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. 403 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளை காங்கிரஸ் - பாஜக - சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று ஹைதராபாத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரான அசாதுதின் ஓவைசி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் தொடர்பாக வேறு எந்த கட்சியுடனும் நாங்கள் ஆலோசனை நடத்தவில்லை என்றும் ஓவைசி தெரிவித்துள்ளார். முன்னதாக, மாயாவதியின், பகுஜன் சமாஜ் கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தத் தகவலை இரு கட்சிகளுமே திட்டவட்டமாக மறுத்துள்ளன.
http://dlvr.it/S2bV1T
Monday, 28 June 2021
Home »
» உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் போட்டி: ஓவைசி அறிவிப்பு